மறியல் போன்ற காவல்துறை அனுமதி மறுக்கிற ஒரு போராட்டத்தை நடத்துபவர்களை காவல்துறை கைது செய்யும். அப்படி கைது செய்பவர்களை காவல்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு போய் ரிமாண்ட் செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் பெருமளவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துகையில் அவர்களை ரிமாண்ட் செய்து சிறையில் அடைக்கிற அளவிற்கு தமிழக சிறைகளில் இடம் கிடையாது. போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்புக்கள் போதவே போதாது.
ஆகவே கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை பதிவு செய்து கொண்டு மாலையில் விடுவிப்பது நடைமுறையாக இருக்கிறது. எங்கே மறியல் செய்தார்களோ அந்த சாலையிலேயே அங்கேயே அவர்களின் விபரங்களை பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது. அவர்கள் விடுவிக்கப் படும் வரையில் அடிப்படையில் அவர்கள் கைதிகள்தான்.
ஆகவே அவர்களை பாதுகாப்பதும் அவர்களுக்கு உணவு வழங்குவதும் காவல்துறையின் பொறுப்புதான். அதனால்தான் கல்யாண மண்டபங்களுக்கு அழைத்துப் போகிறார்கள்.
திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் என்று மட்டுமல்ல, நாளை பாஜக ஏதாவது போராட்டம் நடத்தினாலும் ரிமாண்ட் செய்யாவிட்டால் கல்யாண மண்டபம்தான்.
கைது செய்கிற காவல்துறைதான் கல்யாண மண்டபமோ அல்லது உணவோ அதற்கான செலவை ஏற்க வேண்டும். மாறாக போராட்டம் நடத்துபவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று மறை கழண்டு போனவர்களால்தான் சொல்ல முடியும்.
இந்த சாதாரண விஷயம் கூட தெரியாத ஒருவர் காவி அறிவுஜீவியாம்.
அது சரி
காவியென்றாலே இப்படித்தானே இருக்க முடியும்?
அறிவிருந்தால் காவியாக எப்படி இருப்பார்!!!!
திரு ராமன் உங்களுடைய இந்த பதிவு தவறானது... திரு பக்ஷிராஜன் அவர்கள் கடுமையான பிஜேபி எதிர்ப்பாளர் ...மேலும் BRAHMINICALதனத்தையும் சாடி அவர் தளத்தில் எழுதி இருக்கிறார் ஆகவே உங்கள் பதிவுக்கு இந்த வரிகளை மட்டும் வைத்து கொண்டதை போல தெரிகிறது.. அவர் காவி என்பதற்கு ஆதாரம் காட்டவும் ..BADRINATH
ReplyDeleteதயவு செய்து அவருடைய சமீபத்திய பதிவுகளை படியுங்கள். பெரியார் மீதான கீழ்த்தரமான அவதூறு காவியின் குரலாகவே ஒலிக்கிறது
Deleteபெரியாரை விமர்சித்தாலே காவி என்பதை ஏற்க முடியாது..மேலும் பக்ஷிராஜன் பிராமண வெறுப்பு என்பதை மட்டுமே எதிர்க்கிறார்.. அதை கம்யூ ஒப்பற்ற தலைவர் ஜீவா பெரியார் காலத்திலேயே விமர்சித்திருக்கிறார்.. மேலும் எதிர்த்து பக்ஷிராஜன் எழுதிய முகநூல் பதிவுகள் ஏராளம்..தேவை பட்டால் தருகிறேன்...badrinath
ReplyDeleteபெரியாரை விமர்சித்தாலே காவி என்பதை ஏற்க முடியாது..மேலும் பக்ஷிராஜன் பிராமண வெறுப்பு என்பதை மட்டுமே எதிர்க்கிறார்.. அதை கம்யூ ஒப்பற்ற தலைவர் ஜீவா பெரியார் காலத்திலேயே விமர்சித்திருக்கிறார்.. மேலும் bjpயை எதிர்த்து பக்ஷிராஜன் எழுதிய முகநூல் பதிவுகள் ஏராளம்..தேவை பட்டால் தருகிறேன்...badrinath
ReplyDelete