ஹிந்தி நடிகர் சல்மான்கான் மானை வேட்டையாடிக் கொன்ற குற்றத்திற்காக பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு ஒரு வழியாக ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
நடைபாதையில் படுத்திருந்த ஏழை மக்களை குடிபோதையில் காரேற்றிக் கொண்ட கொடும் குற்றத்திலிருந்து விடுதலையான நிகழ்வோடு இதை ஒப்பிட்டு "மானுக்கு உள்ள மரியாதை கூட மனிதனுக்கு இல்லையே" என்று பலர் கோபத்தோடு ஒப்பிட்டு எழுதி இருந்தனர்.
அந்த கோபம் நியாயமானதே.
மானைக் கொன்ற வழக்கிலாவது தண்டனை கிடைத்ததே என்ற ஆறுதல் எனக்கு உண்டு.
"பிளாட்பாரத்தில் ஏன் அவர்கள் படுத்தார்கள்"
என்று முந்தைய வழக்கில் சிலர் கேள்வி கேட்டது போல
"மான் ஏன் காட்டில் மேய்ந்தது? சல்மான் கண்ணில் பட்டது?"
என்று யாரும் கேள்வி எழுப்பாதது இன்னொரு ஆறுதல்.
ஆனால் சல்மான் ஐந்தாண்டு தண்டனை அனுபவிப்பாரா என்பதே என் மனதில் எழும் ஐயம்.
இப்போது தண்டனை கொடுத்துள்ளது மாஜிஸ்டிரேட் நீதிமன்றம்தான்.
இன்னும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை உள்ளது. அவை என்றுமே பெரிய மனிதர்கள் மீது கருணைக்கண் கொண்டு பார்க்கும் குணமுடையது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றவோ
அல்லது
தண்டனைக் காலத்தை குறைக்கவோ
அதிகமான வாய்ப்புண்டு.
அப்படியே இல்லையென்றாலும் சஞ்சய் தத் போல அவ்வப்போது பரோல் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.
அமித் ஷாவை விடுதலை செய்தால் கவர்னர் பதவி கிடைக்கும் நாட்டில் இதெல்லாம் சாத்தியம்தானே!
Kushtarogi sadasavam innamum governara thaan irukaana?
ReplyDelete