இரண்டு மாதங்கள் முன்பு எழுதிய பதிவு கீழே உள்ளது.
ஆம் . . .
அந்த குழந்தைக்கு நடந்த கொடூரம் பற்றியும் அந்த வழக்கிலே கைது செய்யப்பட்ட காவல்துறை கயவனை விடுவிக்க வேண்டும் என்று காவிகள் தேசியக் கொடியை கையிலேந்தி நிகழ்த்திய ஊர்வலம் பற்றியும் பிப்ரவரி 19 ம் தேதி எழுதிய பதிவு அது.
இப்போது வெளியான தகவல்கள் பல அப்போது தெரியவில்லை.
ஆமாம்.
அந்த குழந்தையை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல கயவர்கள் கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியதும்
அந்த கொடூரம் நிகழ்ந்தது ஒரு கோயிலில்தான்
என்பதும் அப்போது தெரியவில்லை.
கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்ற பராசக்தி வசனம் இன்றும் பொருந்துவது மிகப் பெரிய கொடுமை.
இந்த அராஜகம் ஒரு கோயிலில் நிகழ்ந்துள்ளது என்று அறிகிற போது இயல்பாகவே நிகழ்கிற கேள்வி ஒன்றுதான்.
இப்படி ஒரு கொடுமை தன் முன்னே நிகழ்வதை பார்த்துக் கொண்டிருப்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?
கடவுள் என்பவர் இல்லை என்று நாத்திகர்கள் சொன்னால் பக்தர்களுக்கு கோபம் வரும்.
ஆனால் கடவுள் என்பவரால் தங்களை எதுவும் செய்ய முடியாது என்று கொடுமை நிகழ்ந்த அந்த கோயிலின் நிர்வாகிக்கு நன்றாக தெரிந்துள்ளது. அதனால்தான் அவன் அந்த கேவலமான செயலை ஆலயத்திற்குள் நிகழ்த்தியுள்ளான்.
ஆலயத்தில் அசிங்கம் செய்தவனுக்கு ஆதரவாகத்தான் காவிக் கும்பல் தேசியக் கொடியோடு ஊர்வலம் போயுள்ளது. இப்போதும் சி.பி.ஐ விசாரணை கோருவதும் வழக்கை ஊற்றி மூடத்தான்.
குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் இன்னும் மோசமானவர்கள். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.
அந்த மழலையின் படத்தை பதிவிட மனம் வரவில்லை. கொடுமையை நிகழ்த்திய கயவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவதுதான் இனி எவரும் அப்படி நினைக்காமல் இருக்க உதவிடும்.
காமுகனைக் காக்க தேசியக் கொடியை தூக்கு !!!!
காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தேசியக் கொடியை கையில் உயர்த்தியபடி ஒரு பேரணியை நடத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் ராணுவ அத்து மீறல்களுக்கு எதிராகவா?
எல்லை தாண்டி பயங்கரவாதிகள் வருவதை தடுக்க முடியாத கையாலாகத தனத்தை கண்டித்தா?
காஷ்மீர் மாநிலத்துக்கென எந்த சலுகைகளும் மத்திய பட்ஜெட்டில் இல்லையே, அதை விமர்சித்தா?
இல்லை காஷ்மீர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திய அமைதி ஊர்வலமா?
நோ, நோ, நோ
இதையெல்லாம் பாஜகவிடமிருந்து நீங்களும் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்பது எனக்கும் தெரியும்.
ஆனால் இந்த தேசியக்கொடி ஊர்வலம் எதற்கு என்பதை அறிந்தால் நீங்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது.
காதுவா மாவட்டத்தில் காஸனா என்ற கிராமத்தில் ஆசியா என்ற நாடோடி இனப்பெண் ஜனவரி மாதம் காணாமல் போகிறாள். அவளைக் கண்டுபிடிக்க காவல் துறையிடம் முறையிடுகிறார்கள். மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்ட பின்பு அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப் படுகிறது. அப்பெண் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளாள் என்பதும் தெரிய வருகிறது.
நீண்ட விசாரணைக்குப் பிறகே குற்றவாளியைக் கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.
குற்றவாளியை கைது செய்த பின் போராட்டம் எதற்கு என்பதுதானே உங்கள் கேள்வி.
இங்கேதான் ஒரு ட்விஸ்ட் வருகிறது.
கைது செய்யப்பட்ட குற்றவாளி வேறு யாருமில்லை.
காஸனா கிராமத்தை உள்ளடக்கிய ஹிராநகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் கஜூரியா என்ற உத்தம புத்திரன்.
அந்த உத்தம புத்திரனை விடுதலை செய்ய வேண்டுமென்றுதான் பாஜக அதன் மாநிலச் செயலாளர் விஜய் சர்மா என்ற இன்னொரு உத்தமனின் தலைமையில் பேரணி நடத்தியுள்ளது.
பாலியல் வன் கொடுமை செய்தவனை காத்திட எல்லாம் உயர்த்தும் அளவிற்கு பாஜக தேசியக் கொடியை மதிக்கிறது.
bhakthaal jing chak adikkaraththukaaga ..bhakthaal ellorum sernthu koil'la thaan plan pannuvaanga..
ReplyDeleteடீ கடை 'காரன்' onlinela யாவாரம் செய்யவேண்டும், காய்கறி கடை 'காரி' onlinela யாவாரம் செய்யவேண்டும். ஆனா இந்த பூஜாரி பயலுவளுக்கு தட்டுல 'CASH' மட்டும்தான் போடவேண்டும்!! கோயில்ல உண்டியல்ல காசு போடுரது, பூஜாரி தட்டுல காசு போடுரது எலலாம் தடுக்கப்படவேண்டும். ஆகம தேர்ச்சி பெற்ற அனைத்து ஜாதி அர்சகர்களை இந்த பூஜாரி பயலுவளுக்கு மேல கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டால் கோவில் கொடியவர்களின் கூடாரமாவது தடுக்கப்படும்.
ReplyDeleteடீ கடை 'காரன்' onlinela யாவாரம் செய்யவேண்டும், காய்கறி கடை 'காரி' onlinela யாவாரம் செய்யவேண்டும். ஆனா இந்த பூஜாரி பயலுவளுக்கு தட்டுல 'CASH' மட்டும்தான் போடவேண்டும்!! கோயில்ல உண்டியல்ல காசு போடுரது, பூஜாரி தட்டுல காசு போடுரது எலலாம் தடுக்கப்படவேண்டும். ஆகம தேர்ச்சி பெற்ற அனைத்து ஜாதி அர்சகர்களை இந்த பூஜாரி பயலுவளுக்கு மேல கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டால் கோவில் கொடியவர்களின் கூடாரமாவது தடுக்கப்படும்.
ReplyDelete