கவலை வேண்டாம் ஆசாராம்,
யாமிருக்க பயமேன்?
ஆயுள் தண்டனை அளித்தாரென
கவலை வேண்டாம் ஆசாராம்!
கீழமை நீதிமன்றங்கள்
என்றாவது நியாயமாய்
தீர்ப்பளித்தால்
எப்போதும் நிராகரிக்கும்
மேல் மன்றங்கள்
என்றும் உண்டு எம்
வசம்!
தீர்ப்பை மாற்றுவோம்
தேவையெனில்
தீர்ப்பு எழுதுவோரையே
தீர்த்துக் கட்டுவோம்.
லோயாக்கள் வாழ்ந்த
மன்றங்களில்
இன்று வாழ்வதென்னவோ
மிஸ்ராக்கள்தான்.
எங்கள் வாழ்க்கை
உங்களின் தயவால்
உங்களைக் காக்கத்தான்
மன்றத்தின்
உச்சத்
தலைவர்.
அவரைக் காக்க
வெங்காயங்கள்,
எங்களின் தயவில்
வெங்காயங்கள்.
இதுதானே நம்
குற்றச் சுற்று.
தூக்குத் தண்டனையென
அவசரச்சட்டமா?
அது குறித்தெல்லாம்
உமக்கு கவலையா?
வழக்கமான என்
வாய்ச்சொல்
எப்போதும் போல்
பிறருக்குத்தான்.
காமுகர்களைக் காக்க
கையில் தேசியக்கொடி
காஷ்மீரில் ஏந்தியது
நாம்தானே!
தண்டனைக்கே
தண்டனை தருபவர்
நாமெல்லவோ?
கவலை வேண்டாம்
ஆசாராம்.
ஆயுள் தண்டனை
அதி விரைவில் மாறும்.
நீதியா?
அது கிடக்கட்டும் கழுதை!
Super comrade.... நல்ல நையாண்டி... அவலம் காணும்போது எழும் விரக்தி நையாண்டி .. 😌😌😌
ReplyDelete