மஹாபாரதத்தில்
போர் நிகழ்வுகளை அமைச்சர் சஞ்சயன் அரசன் திருதராஷ்டிரனுக்கு விவரித்ததே அந்த காலத்தில்
இணைய வசதி இருந்ததற்கான சான்று என்று திரிபுரா புது முதல்வர் சொன்னது கேட்டு புல்லரித்துப்
போனேன்.
ராஜாஜி
எழுதிய “மஹாபாரதம்” புத்தகத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்த்தேன். இணைய தள வசதி
பற்றி ராஜாஜி ஏதாவது எழுதி உள்ளாரா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறையாக தேடினாலும்
அது பற்றி அவர் ஒன்றுமே எழுதவில்லை.
போர்
நிகழ்வுகள் பற்றி ராஜாஜி எழுதிய நூலிலும் கூட சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு விவரிக்கிறார்.
சஞ்சயனுக்கு எப்படி அந்த விபரங்கள் தெரிய வருகிறது என்று ராஜாஜி ஒரு வரி கூட எழுதவில்லை.
பி.ஆர்.சோப்ரா இயக்கிய மஹாபாரத் தொலைக்காட்சி தொடரில் சஞ்சயனுக்கு அந்த சக்தியை வியாசர்
கொடுத்தார் என்று ஒரு காட்சி வரும். ராஜாஜியின் நூலில் அப்படி கூட எதுவும் இல்லை.
மஹாபாரத
காலத்தில் இருந்த இணைய வசதி பற்றி பாவம் ராஜாஜிக்கு எதுவும் தெரியவில்லை என்பதுதானே
உண்மை!
ராஜாஜி
வாழ்ந்த காலத்தில் கூட இணைய வசதி இல்லை என்பதும் இன்னொரு உண்மை. . .
பி.கு : பிப்ளப் குமார் தேப் எனும் அந்த அறிவாளி பற்றி இன்னொரு பதிவு வேறு எழுதித் தொலைக்க வேண்டியுள்ளது.
பி.கு : பிப்ளப் குமார் தேப் எனும் அந்த அறிவாளி பற்றி இன்னொரு பதிவு வேறு எழுதித் தொலைக்க வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment