Saturday, April 7, 2018

ஆளுனர் எனும் அபாயகரமான வில்லன்



தமிழகம் முதலில் அந்த மனிதனை ஒரு காமெடியனாகத்தான் பார்த்தது. கடலூரில் பாத்ரூமில் எட்டிப் பார்த்த போது மீம்ஸ் கொண்டு தாக்கியது.

ஆனால் ஆளுனர் ஒன்றும் காமெடியன் அல்ல.

மாநில அரசின் அதிகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு மாவட்டங்கள் தோறும் ஆய்வு என்று போய்க் கொண்டே இருக்கிறார். கறுப்புக் கொடி காட்டினாலும் எனக்கு என்ன என்று துடைத்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்.

முதலில் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக சூர்யநாராயண சாஸ்திரி

இப்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பா என்று

அனைத்து விதிகளையும் காற்றில் பறக்க விட்டு தனக்கு வேண்டியவர்களை துணை வேந்தராக நியமித்துக் கொண்டே இருக்கிறார்.

யார் என்ன திட்டினாலும் எனக்கு கவலையில்லை. எதற்காக இங்கே வந்தேனோ, அதை செய்வேன் என்று திமிர் நன்றாக தெரிகிறது.

மாநில ஆட்சியாளர்கள் அடிமையாக இருப்பதன் விளைவு இது.

காவிரி, ஸ்டெரிலைட் பிரச்சினை தீர்ந்த பின் தமிழக மக்கள் கையிலெடுக்க வேண்டிய அடுத்த போராட்டம் பன்வாரிலால் புரோஹித் என்ற இந்த காவியை தமிழகத்திலிருந்து துரத்துவதாகத்தான் அமைய வேண்டும்.


2 comments:

  1. ஐயா உங்களுக்கு இப்பிடி பேராசை கூடாது 2 அடிமை கட்சியும் சேர்ந்தாலும் நீங்க சொன்ன காவிரி ஸ்டெர்லைட் பிரச்சனை தீர்க்கப்படாது

    ReplyDelete
  2. லா யுனிவர்சிட்டிக்கு துணைவெந்தர் போட்டபொழுது இந்த பிரச்சினைய மக்களிடம் கொண்டு சென்றிருக்கவேண்டும். இப்போ அண்ணா யுனிவர்சிட்டிக்கு போட்டாச்சு! இப்போதாவது மைலாப்புர் மாஃபியாவுக்கு பதில் மன்னார்குடி மாஃபியா எவ்வள்வொ தேவலை என்று உம் அறிவுக்கு தோனலையா.

    ReplyDelete