வழக்கறிஞரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான தோழர் பிரதாபனின் முகநூல் பதிவை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல் திருமதி ஜெஸ்ஸி முரளிதரன் மீதான அவதூறுப் பிரச்சாரத்தையும் கண்டிக்கிறேன்.
அவர் பற்றிய எந்த ஒரு பதிவையும் யாரோடும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தலை நிமிர்ந்து கூறுகிறேன்.
வாழ்த்துக்கள் தோழர் பிரதாபன்
நாங்கள்
நீங்களல்ல.....
_______________________
#ஜெசிமுரளிதரனுக்கு ஆதரவாக...
நாம் ஜனநாயகவாதிகள். பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை தட்டிக்கேட்பவர்கள்.
பெண்களுக்கு தங்கள் இயக்கத்தவர்களால் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டும் காணாமல் செல்ல நாம் தமிழிசையோ வானதியோ அல்ல.
எனவே, நிர்மலா தேவி என தவறாக அடையாளம் காட்டப்பட்டு, இன்று சமூக வலைதளத்தில் மோசமாக சித்தரிக்கப்படும் பாஜகவின் மகளிர் அணி பொறுப்பாளர் ஜெசி முரளிதரன் மீதான வலைதளத்தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்!
போட்டோஷாப் செய்வதும், பொய்யான செய்திகளை பரப்புவதும் பாஜக மற்றும் அதன் பரிவாரங்களின் பணி. நம் பணி உண்மையை நோக்கி செல்வதே..!
சகோதரி ஜெசி முரளிதரன் அவர்களின் மனநிலை எந்தளவுக்கு இந்த அவதூறுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை நம் பெண் தோழர்களை சங்கீகள் ஆபாச தாக்குதலில் ஈடுபட்டபோது, நம் தோழர்களுக்காக நாம் நின்றதால், நமக்கு அந்த வலி புரியும்!
அப்போது வேடிக்கைப்பார்த்தவர்களில் ஒருவராகத்தான் சகோதரி ஜெசியும் இருந்திருப்பார். ஆனால், இனி வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் நிகழும்போது கட்சி வேறுபாடு கடந்து கண்டிப்பார் என நம்புவோம்!
Jessy Muralidharan உங்களுக்கு எதிரான இத்தாக்குதலை ஒரு கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினரான நான் கண்டிக்கிறேன்.
ஏனுங்க நீங்க ஏனுங்க வர்த்தம் தெர்விஸ்கீரீங்கோ, அவொளுக எவளாவது ஆசிபா விசயத்துல வாயதொறந்துகீறாலுவளா! போங்க, போயி வேற சோலி மசிருஇருந்தா பாருங்கோ
ReplyDeleteஏனுங்க நீங்க ஏனுங்க வர்த்தம் தெர்விஸ்கீரீங்கோ, அவொளுக எவளாவது ஆசிபா விசயத்துல வாயதொறந்துகீறாலுவளா! போங்க, போயி வேற சோலி மசிருஇருந்தா பாருங்கோ
ReplyDelete