Sunday, February 22, 2015

மோடியை ஜவுளிக்கடை பொம்மையாக்கிட்டாங்களே



ஊர் ஊரா சுத்தினீங்களே,
உலகமெல்லாம் சுத்தினீங்களே,
வாயால வடை சுடற
வல்லவன்னு  சொன்னாங்களே,
ஒன்பது லட்ச ரூபா கோட்டு போட்டு
கோட்டு புல்லா உங்க பேர போட்டு
என்னைப் போல  எவனால முடியும்னு
56  இஞ்சு நெஞ்ச நிமித்தி கேட்டிங்களே,
ஒபாமாவ "பாரக்" னு கூப்பிட்டு
கெத்தெல்லாம் காட்டீனீங்களே,
மவ்ராசா, உங்களைப் போய்
இப்படி ஜவுளிக்கடை பொம்மையாக்கி
அழகான அந்த கோட்டையும்
ஏலம் விட வச்சுட்டாங்களே!
ஏலம் கூட செல்லாதுனு
பிராது வருமுனு சொல்லி
இப்படி கதி கலங்க வைக்கறாங்களே!
நீங்களா கொடுத்ததையெல்லாம்
ரகசியம், திருட்டுனு பேசி
உங்க சோக்காளிக்கெல்லாம்
கிலி கொடுக்கறாங்களே ராசா!
வெளிநாடு போய் ஒளிஞ்சுக்கோ ராசா!
வேறென்ன வழி இருக்கு!

(கொஞ்சம் ஒப்பாரி ஸ்டைலில் படிக்கவும்)
 

1 comment:

  1. காந்தி பிறந்த மண்ணில்
    பிரதமரின் உடை ஏலம்

    ReplyDelete