மேலேயுள்ள கதாயுதம் இலங்கையில் அகழ்வாராய்சி நடத்தும் போது கண்டுபிடிக்கப்பட்டது. ராவணனுக்கு எதிரான போரில் ஹனுமான் பயன்படுத்தியது, இதுதான் ராமாயணம் நடந்ததற்கான ஆதாரம் என்ற ரீதியில் முகநூலில் பலரும் பக்திப் பரவசத்தோடு பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை பலரும் நம்பி புல்லரித்துக் கொண்டு போய் இருக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் மத்தியப் பிரதேசத்தில் 125 அடி உயரத்தில் செய்யப்பட்ட ஹனுமார் சிலையில் பொருத்துவதற்காக செய்யப்பட்ட கதாயுதம். அதை அந்த சிலை உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது எடுத்த புகைப்படம். இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.
ஆனால் இலங்கையில் புதைந்து கிடந்தது, ஹனுமான் போரில் பயன்படுத்தியது என்ற கற்பனைக் கதைகள் இப்போதுதான் கிளம்பியுள்ளது.
இதற்கு முன்பாக கடோத்கஜன் எலும்புக் கூடு என்ற மோசடிக்கதை உலாவிக் கொண்டிருந்தது பற்றி எழுதியதன் இணைப்பை மேலே அளித்துள்ளேன்.
கேட்பவன் கேணையன் என்றால் கேரம் போர்டைக் கண்டுபிடித்தது கே.எஸ்.ரவிகுமார் என்றுதான் சொல்வார்கள்.
இப்படி கட்டுக்கதைகள் மூலம்தான் பக்தியை பாதுகாக்க வேண்டியிருப்பது அதன் பலவீனம்தானே!
எதைச் சொன்னாலும் அதை நம்புவதற்கு
ReplyDeleteஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது
வேதனை நண்பரே
ஆம் நண்பரே, அதுதான் கொடுமை
Deletethozhar idhai yaarum nambala thozhar.
ReplyDeleteதோழர் சங்கர், நீங்கள் நம்பவில்லை என்று எனக்கும் தெரியும். முகநூலில் நீங்கள் இட்ட ஒரு பின்னூட்டமும் படித்தேன். ஆனால் நம்பிக் கொண்டிருப்பவர்கள் பலர்
Deleteஇலங்கையில் அகழ்வாராய்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாக காட்டபட்ட கதாயுதம் புத்தம் புதிதாக இருக்கிறது, ஆனால் பலரும் அதை அகழ்வாராய்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்று நம்பி புல்லரித்துக் கொண்டு போய் இருக்கிறார்கள்:)
ReplyDeleteதமிழகத்திலேயே பக்கத்தில் உள்ள இலங்கையை பற்றி எத்தனை கற்பனைக் கதைகள் உலாவருகின்றன!