Friday, February 6, 2015

டெல்லி தேர்தல் – பாஜக பயப்படுகிறதா?




டெல்லி மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கும் மோடி அரசின் செயல்பாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமித் ஷா பேசியுள்ளதன் மர்மம் என்ன?

பொதுவாக மாநிலத் தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோற்றுப் போனால் மட்டுமே மத்திய அரசின் செயல்பாடுகளுக்கும் இப்போது நடந்து முடிந்த மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பு கிடையாது, லொட்டு லொசுக்கு என்றெல்லாம் விளக்கம் கொடுப்பார்கள். அது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம்.

ஆனால் வாக்குப் பதிவிற்கு முன்பாகவே இவ்வாறு அமித் ஷா சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

ஒருவேளை டெல்லி மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றுப் போய் விடுவோமோ என்று அஞ்சி அட்வான்ஸ் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளாரோ அமித் ஷா?

அமித் ஷா ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.

ஒருவேளை பாஜக தப்பித்தவறி தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றால் மோடி அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டி டெல்லி மக்கள் அளித்த பரிசு என்று அப்போது தோசையைத் திருப்பிப் போட்டு பல்டியெல்லாம் அடிக்கக் கூடாது.

பீ கேர்புல்.

1 comment:

  1. AAM ADMI PARTY WILL GIVE A TOUGH FIGHT THIS TIME AS DELHI PEOPLE HAVE DECIDED TO VOTE
    FOR AAP AS CONG IS NOT AT ALL IN THE RACE AND ITS BETRAYAL TO AAP LAST TIME IS WELL
    KNOWN. IT IS A SHAME FOR BJP THAT THE COUNTRY'S CAPITAL WILL HAVE A PM FROM AAP AND
    NOT FROM BJP. PEOPLE ARE NOT HAPPY WITH BJP AS THEY HAVE NOT DONE NOTHING DESPITE
    TALL AND EMPTY PROMISES.

    ReplyDelete