மதுரையில் நேற்று எங்கள் சங்கத்தின் ஆறாவது தமிழ் மாநில மகளிர் மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டில் எங்கள் சங்கத்தின் மூத்த தலைவ்ர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துவக்க காலத் தலைவர் தோழர் திண்டுக்கல் ஆர்.நாராயணன் கலந்து கொண்டார். தொன்னூற்றி மூன்று வயதான அத்தோழர் பேசுகையில் 'இப்போதெல்லாம் என் பெயரே எனக்கு மறந்து போகிறது" என்று குறிப்பிட்டார். சங்கத்தின் துவக்க காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்பிட்டு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த பெருமிதத்தையும் பகிர்ந்து கொண்டார். "எந்த ஒரு பலனும் போராட்டம் இல்லாமல் பெற்றதில்லை. போராட தயாராக இல்லாத மனிதன் வாழ்வதற்கு தகுதியிழக்கிறான், Never Say Die, Never Accept Defeat, Fight Continuously" என்று எழுச்சியளிக்கும் விதத்தில் பேசினார்.
பிறகு மாநாட்டு அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற ஒரு இளைய பெண் தோழர் பேசியதுதான் அருமை.
அவர் தோழர் நாராயணன் தன்னுடைய பெயரே தனக்கு மறந்து போகிறது என்பதை குறிப்பிட்டு
"உங்களுடைய பெயரை நீங்கள் மறந்தால் என்ன சார்? உங்களுடைய தியாகத்தாலும் உங்களுடைய பணிகளாலும் இன்று நீங்கள் நிகழ்த்திய அற்புதமான உரை மூலமாகவும் உங்கள் பெயர் எங்கள் மனதில் என்றும் நினைவில் இருக்குமே சார்"
அதுதானே நம் பெயரை நாம் மறந்தால் என்ன?
மற்றவர்கள் மறக்காமல் இருக்கும்படி நம் செயல்பாடு அமைய வேண்டும் என்பதுதானே முக்கியம்.
அருமையான கருத்துடன் கூடிய பதிவு
ReplyDeleteபெயர் மறந்தவர் கடந்த கால நிகழ்வுகளை
மறவாது பேசியதே தனி மனித இயல்பு கடந்து
சமூக மனிதராகவே வாழ்ந்து வருபவர் என்பதை
புரிய வைத்தது
மனம் தொட்டப் பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இன்றும் ஒரு போராளியாக வாழ்ந்து வருபவர். எங்களுக்கெல்லாம் உற்சாகம் அளிப்பவர்
Delete///போராட தயாராக இல்லாத மனிதன் வாழ்வதற்கு தகுதியிழக்கிறான்///
ReplyDeleteஉண்மை உண்மை
அருமையான வார்த்தைகள்
உணர்ச்சி வசப்படவைத்த வார்த்தைகள். உணர்வூட்டிய வார்த்தைகள்
Delete