இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் 21 வது மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தின் போது 2013 ம் ஆண்டிற்கான சாகித்ய
அகாடமி விருதை தனது “தோல்” நாவலுக்காக பெற்ற மூத்த எழுத்தாளர் தோழர் டி.செல்வராஜ்
அவர்களை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி
அவர்கள் தோழர்களின் உற்சாகக் கரவொலிகளுக்கு மத்தியில் கௌரவித்தார்.
அப்போது பேசிய தோழர் டி.செல்வராஜ்
“சாகித்ய அகாடமி விருதை விட, எந்த வர்க்கத்திற்காக
நான் எழுதுகிறேனே, அந்த உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் கைத்தட்டல்கள்தான்
எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம்” என்றார்.
அவர் சொன்ன இன்னொரு கருத்தும் மிக முக்கியமானது.
“எனக்கு எதிராகவும் காவிக்கூட்டம் ஒரு சமயம்
பிரச்சினை செய்தது. நான் சார்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கம் உடனடியாக தலையிட்டவுடன் அவர்கள் அடங்கிப் போனார்கள். பெருமாள் முருகனைப்
பொறுத்தவரை அவர் எந்த அமைப்பிலும் சேராதவராக இருந்ததால்தான் அவர்களால் அவரை
சுலபமாக நெருக்கடிக்கு உள்ளாக்க முடிந்தது”
No comments:
Post a Comment