Monday, February 9, 2015

காட் ஃபாதரா நாயகன்? ரொம்ப குழம்புதே





மார்லன் பிராண்டோ நடித்த காட் ஃபாதர் திரைப்படத்தின் காப்பிதான் நாயகன் என்பது பல வருடங்களாக பேசப் பட்டு வருகிற ஒரு விஷயம். கமலஹாசன் பற்றி பா.தீனதயாளன் எழுதிய படத்தில் கூட மரியோ பூஸா (காட் ஃபாதர் புத்தகத்தை எழுதியவர்) வை தமிழில் இந்தியப் படுத்திக் கொடுத்ததாக கமல் சொன்னதாக ஒரு வரி வரும். காட் ஃபாதர் திரைப்படத்தை நான் பார்த்ததில்லை. அதனால் ஒரு வேளை அப்படித்தான் போலும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் முதலில் படித்து முடித்தது தமிழில் ராஜ் மோகன் எழுதி வெளியாகியுள்ள “காட் ஃபாதர்” திரைக்கதைதான்.

அதைப் படித்ததும் பெரும் குழப்பமே வந்து விட்டது.

நாயகனுக்கும் காட் ஃபாதருக்கும் ஒற்றுமை இருப்பதாக எனக்கு தோன்றிய விஷயங்கள்.

டான் லிடோ கர்லியானும் வேலு நாயக்கரும் சில கொள்கைகளும் கொண்டிருக்கிற நிழல் உலக தாதாக்கள்.

டான் லிடோ கர்லியானின் எதிரிகளும் ரெட்டி சகோதரர்களும் ஒரே நேரத்தில் கொல்லப்படுகின்றனர்.

டான் லிடோ கர்லியானின் மகன் சோனியும் வேலு நாயக்கர் மகன் சூர்யாவும் கொல்லப்பட இருவரும் கதறுகிறார்கள்.

காரில் அமரும் ஒருவரை பின்னால் இருந்து கம்பியால் இழுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

தன்னுடைய மகளை சிதைத்தவர்களை பழி வாங்க போன்சேரா என்பவர் டான் லிடோ கர்லியானின் உதவியை நாடுகிறார். டான் களின் சந்திப்பை நடத்த அந்த போன்சேரா தன் செல்வாக்கை பயன்படுத்துகிறார்.

அதே போல ஏ.சி.பி ராகவன் தன் மகளை சீரழித்த அரசியல்வாதிகளை பழி வாங்க வேலு நாயக்கரை தேடி வருகிறார். பிறகு வேலு நாயக்கருக்கு எதிராக சேலம் பாண்டியன் சாட்சி சொல்லப் போகும் தகவலை அவரே சொல்கிறார்.

இவற்றைத் தவிர இரண்டு திரைப்படங்களின் கதைகளுக்கும் எந்த ஸ்னானப் பிராப்தியும் இருப்பதாக தெரியவில்லை.

இல்லை ஒரு வேளை கமல ஹாசன் காப்பியடித்தது வேறு காட் ஃபாதர் படமாக இருக்குமோ?

நிஜமாகவே குழப்பமாக இருக்கிறது. யாராவது விஷயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் குழப்பத்தை போக்குங்களேன். 

பின் குறிப்பு : விறுவிறுப்பான நாவல் போல இத்திரைக்கதையை தமிழில் அளித்த ராஜ்மோகன் அவர்களுக்கும் வெளியிட்ட திரு அஜயன் பாலா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

4 comments:

  1. நாயகன் படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன் ! இயக்கியவர் மணி ரத்னம் ! கதை மணிரத்னம் ! வசனம் பாலகுமாரன் ! 1975-77 ம் ஆண்டுகளில் மாதுங்கா பகுதியில் வரதராஜ முதலிக்கு மக்களிடையே செல்வக்கு அதிகம் ! அப்பொதுமும்பையில் படித்துக் கொண்டிருந்த மணிக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவரின் செல்வாக்கு ஆச்சரியமாக இருந்தது ! இது பற்றி கமலஹாசனிடம் பெசியிருக்கிறார் ! பின்னர் வரதரஜ முதலியாரிடமும் கலந்து கொண்டிருக்கிறார் ! உண்மையில் வெலு நாயக்கர் இறந்து பொகும்படி காட்சியை அமைக்கச்சொன்னதே வரத ராஜ முதலியார் தான் !
    தமிழ் திரயினரோ ,மணி,கமல் ஆகியொர் காபி அடிக்க மாட்டர்கள் என்று சொல்லவரவில்லை ! "நாயகன் " படம் பற்றி நான் அறிந்தவற்றை தகவலாக தருகிறென் !---காஸ்யபன்.

    ReplyDelete
  2. காட் பாதர் ஆங்கில நாவலைப் படித்திருக்கின்றேன் நண்பரே
    தாங்கள் கூறுவது உண்மைதான்,அக்கதைக்கும் இப்படத்திற்கும்பெரிய தொடர்பில்லை
    தாதா என்பதுதான் பொதுவானது

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் ஜெயகுமார் அவர்களே

      Delete