Monday, February 16, 2015

மோடி அரசின் தலை போலத்தானே வாலும் இருக்கும்?

 Virat Kohli celebrates after taking the catch that dismissed Shahid Afridi on Sunday at the Adelaide Oval.

ஹிந்து நாளிதழில் வெளியான செய்தியை படிக்க இந்த இணைப்பிற்குச் செல்லவும்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒட்டி பாகிஸ்தானிற்கு எதிரான விஷமம் தோய்ந்த கருத்துக்களை அகில இந்திய வானொலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

காலம் காலமாக அது போன்ற கருத்துக்களை உருவாக்குவதுதானே காவிக்கூட்டத்தின் பணியாக இருந்திருக்கிறது! பாகிஸ்தானுடனான கிரிக்கெட் ஆட்டத்தை ஏதோ மூன்றாவது உலக யுத்தம் என்ற ரீதியில் மக்கள் பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஹாக்கி என்றால் கண்டு கொள்ளாமல் போய் விடுவார்கள் என்பது வேறு கதை.

இப்போது சர்ச்சை அகில இந்திய வானொலி எப்படி செய்யலாம் என்பதைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களாக விஷத்தைத்தானே பரப்பிக் கொண்டிருக்கிறது! அரசின் தலை எந்த வழியில்  செல்கிறதோ, அந்த வழியில்தானே வாலும் செல்லும்!

விசாரணை செய்வோம் என்றெல்லாம் முன்னாள் விளையாட்டு வீரரும் இன்றைய அமைச்சருமான ராஜ்யவர்த்தன் ரதோர் சொல்லியுள்ளார். இதில் விசாரணை, மண்ணாங்கட்டியெல்லாம் எதற்கு? ஆட்சியாளர்களின் கொள்கையை அகில இந்திய வானொலி நிறைவேற்றியுள்ளது. 

மாற்ற வேண்டியது அதைத்தான்

3 comments:

  1. In Europe countries, when they play football between neighbor countries, SPORTIVELY huge competition and fight will be there among fans. But they never have animosity on border/land issues. But here, fans/politician/media everybody create animosity for sports between india and Pakistan.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தோழர், நீங்கள் தனியாக நின்று ஜெயித்து மற்ற கட்சிகளை ஓரங்கட்டியதற்கு, அட எந்த தொகுதின்னு தெரியலையா தோழர், நம்ம ஸ்ரீரங்கம் தொகுதிதான் :)))

    ReplyDelete
    Replies
    1. திருவாளர் அனானி, உங்களைப் போல முகம் காட்ட அஞ்சிய கோழையாக பல அரசியல் கட்சிகள் தங்கள் ஜனநாயகக் கடமையிலிருந்து ஓடிய போது விளைவுகளுக்காக அஞ்சாமல் ஸ்ரீரங்கம் தொகுதியில் நாங்கள் போட்டியிட்டோம். ஆக முடிவைப் பற்றி கவலையில்லை. கொள்கை வழி உறுதியாக நின்ற எங்களை கிண்டலடிக்க அனாமதேயமாக யார் என்று சொல்ல தைரியமில்லாத உங்களைப் போன்ற கோழைகளுக்கு அருகதையில்லை. தன்னுடைய பெயரோடு ஒரு கருத்தைச் சொல்ல வக்கற்ற வெட்கம் கெட்ட ஜென்மங்கள் என்றும் திருந்தாது.

      Delete