பீகார் மாநிலம் இன்று ஒரு அரசியல் குழப்பத்தில் இருக்கிறது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாஜக முயல்கிறது.
பிரதமர் கனவில் மிதந்த நிதீஷ் குமாருக்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் பலத்த அடியை கொடுத்தது. உள்ளதும் போனது. எனவே தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தலித்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று காண்பித்துக் கொள்ள ஜிதன்ராம் மஞ்சியை முதல்வராக்கினார்.
தன் கைக்கு அடக்கமாக இருப்பார் என்று நம்பிய ஜிதன்ராம் மஞ்சி முதல்வர் பதவிக்குரிய அதிகாரங்களை பயன்படுத்த தொடங்கிய பின்பு நிதிஷ்குமாருக்கு அச்சம் வந்து விட்டது. தான் மீண்டும் முதல்வர் பதவியிலேயே அமர ஆசைப்பட்டார்.
ஆனால் ஜிதன்ராம் மஞ்சி முரண்டு பிடிக்க அவர் கட்சியிலிருந்தே நீக்கப் பட்டு விட்டார். ஆனாலும் இன்னமும் நிதிஷ் குமாரால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. ஆளுனர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் பாஜக என்ன சித்து வேலைகளை செய்யப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சட்டப்படிப் பார்த்தால் ஆளுனர் நிதிஷ்குமாரை முதல்வராக்கி அவருடைய பெரும்பான்மையை சட்டப் பேரவையில் நிரூபிக்கச் சொல்ல வேண்டும். ஒருவேளை அதில் நிதிஷ்குமார் வெற்றி பெறலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் நிதிஷ்குமாருக்கு பின்னடைவுதான்.
ஆனால் இப்பிரச்சினைக்கான முக்கியமான காரணம்
ஜிதன்ராம் மஞ்சி ஓ.பன்னீர்செல்வம் அல்ல.
No comments:
Post a Comment