நேற்று காலமான சுதந்திரப் போராட்ட வீரரும் பொதுவுடமை இயக்க மூத்த தலைவருமான தோழர் ஐ.மாயாண்டி பாரதி பற்றி அவரோடு பழகிய எங்கள் இன்சூரன்ஸ் இயக்க மூத்த தோழர் காஷ்யபன் பகிர்ந்து கொண்டதை இங்கே பதிவு செய்துள்ளேன்.
தோழர் ஐ.மா.பா அவர்களுக்கு எனது செவ்வணக்கம்.
"ஐ.மா . பா " அவர்களுக்கு அஞ்சலி...!!!
"ஐ.மா.பா " என்ற ஐ.மாயாண்டி பாரதி .........
மதுரை "டவுண் ஹால் " ரோடிலிருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில்
வலதுபக்கம் முதல் சந்து தான் மண்டயனாசாரி சந்து.எனக்கு நினைவு தெரிந்த
நாளிலிருந்து அங்குதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்
இருந்தது.பிடி.ஆர்,சரோஜ் முகர்ஜி ,சுந்தரய்யா,. இ.எம்.எஸ், என்று அந்த பாரத
புத்திரர்களின் பாதம்பட்ட அலுவலகம் அது. அந்த வீடு ஐ.மாயாண்டி பாரதியின்
வீடு.
மதுரை மேலமாசிவீதியில் "ரேமாண்ட்ஸ் " இருந்த கட்டடத்தின் மாடியில் தான்
ஐ.மா.பா வசித்து வந்தார். அவர் "தீக்கதிர்" அலுவலகத்திற்கு செல்லும் அழகே
தனி. வெள்ளை வேட்டி,சட்டை ,கழுத்தில் நேரியல், ஒருபையில் மதிய உணவு,சில
புத்தகங்கள், மற்றொரு மஞ்சள் பையில் இனிப்புமிட்டாய் களொடு புறப்படுவார்.
ஐந்து வயதிலிருந்து சிறுவர்கள் அவர் படியை விட்டு இறங்கியதும் "தாத்தா
-தாத்தா" என்று மொய்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு பையிலிருந்து மிட்டாய்
கொடுப்பார். வடக்கு ஆவணி மூல வீதி 1ம் நம்பர் சந்திலிருந்த தீக்கதிர் பை
பாஸ் ரொடு போனபிறகும் இது தொடர்ந்தது.
புது அலுவலகத்தில் ரோட்டைப்பார்த்த ஜன்னல் அருகில்தான் அவருக்கு இடம்.
பள்ளிச்சிறுவர்கள் ஜன்னளொரம் வந்து தினம் மிட்டாய் வாங்கிகொண்டு
செல்வார்கள். ஒய்வு நேரங்களீல் அவர்களுக்கு பகத்சிங், திருப்பூர்
குமரன்,போன்ற தெசபக்தர்களீன் கதையைச்சொல்வார். கண்கள்விரிய, வாய்பிளக்க,
அந்தச்சின்னஞ்சிறிசுகள் பார்க்க நடிதுக்காட்டுவார். அதில் ஒருசிறுவன்தான்
படித்து,மாணவர்,இயக்கம்.வாலிபர்சங்கம் என்று வளர்ந்து தீக்கதிர்
துணைஆசிரியராக அவர் அருகில் அமர்ந்து பணியாற்றிய பாண்டி என்ற பாண்டியன்
இன்று மதுரை நகரத்தில் பகுதிகமிட்டி,இடைக்கமிட்டி என்று தலமை
வகிப்பவர்களில் பலர் அன்று அவரிடம் மிட்டய் வாங்கிய சிறுவர்களாவர். Catch
them young என்பதை நடைமுறைப்படுத்தியவர் அவர்.
சுதந்திரப் பொராட்டகாலத்திலும்,தலைமறைவு வாழ்க்கையின் போதும் நடத்திய
சாகசங்கள் மெய்சிலிர்க்க சொல்லுவார். காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்டுகளை
நரவேட்டையாடிக்கொண்டிருந்தது.தலமறைவாக இருந்தனர். செலம் சிறையில்
கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்." சாமா! இதுக்கு பதிலடி
கொடுக்கணம்னு தொணித்து.பவநகர் மகாராஜா தூத்துக்குடி வர இருந்தார்.
மீள்விட்டான் பக்கத்துலா காத்திருந்தோம். ராத்திரி.தண்டவாளத்தை கழட்டி
ரயிலை கவிழ்த்துவது திட்டம். ரயிலும் வந்தது கவிழ்ந்தது.ஆனா அது கூட்ஸ்
ரயில் "
என்றுகூறிவிட்டு,"நெஞ்சுல கோபமிருந்தது.வீரமிருந்தது.விவேகமில்ல" என்று முடிப்பார்.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில தெலுங்கு செட்டியார் வேடத்தில அவர் பாலவிநாயகத்தோட சுத்தியதை கதை கதையாகச்சொல்லுவார்.
" ஐ.மாபா! பத்திரிகைக்கு எப்படி வந்தீங்க?"
"கட்சி வேலை! எதுன்னாலும் செய்யத்தான வேணூம். ஜனசக்தில ஒக்காருன்னாங்க.
அங்க ஜீவா,மாஜினி, முத்தையா கூட வேலை.வேடிக்கை தெரியுமா? மூணு பெருக்கும்
காதுகேக்காது." என்று கூறி சிரிப்பார்.
கட்சி மீது அவருக்குள்ள விமரிசனத்தை கோபமாக வெளிபடுத்துவார். கே.ஏம்
அவர்க்கு விளக்கமளித்து சமாதானப்படுத்துவார்.அவர் போனதும் என்னிடம்"
தஞ்சாவூரில் வசதியான குடும்பம். அண்ணமலைல படிக்க அனுப்பினாங்க பால
தண்டாயுதம் இவருனு மானவர்களை சேத்தாங்க.பொலீஸ் பிடிச்சுட்டான். அப்பா
சத்தம்போட்டார். குடும்பத்துக்கும் எனக்கும்சம்பந்தமில்லனு சொல்லி விடுதலை
பத்திரம் எழுதிகொடுத்துட்டு கட்சிக்குவந்துட்டாரு. இப்ப அலுமினிய சட்டியில
கரி அடுப்புல மதியசோற பொங்கி சாப்பிடுதாரு."
கண்கள் கசிய அவர்கள்
இருவரையும் மனதால் தொழுவேன்.
சில சமயம் காரசாரமாக கே.எம் அவர்களோடு விவாதிப்பார். கொபம் கொப்புளிக்கும்
கே எம் எழுந்து பொய்விடுவார். கோஞ்ச நேரம் கழித்து கிரஷாம் என்ற ஆபீஸ்
எடுபிடி ஐ.மா.பா வை வந்து கூப்பிடுவார்." சமாதானமா! வர முடியாது" என்பார்.
சிறிது நேரம் கழித்து ஒரு அலுமினிய டம்ளரில் சூடாக டீ யை கே எம் கொண்டு
நீட்டுவார். "ஏன் ! இதைக்குடிக்க அங்க வரணுமோ
" சர்யா! ஒரு டீ தான் இருந்தது.எல்லார் முன்னலயும் உமக்குமட்டும்கொடுத்தா ..."
ஐ.மா.பா டீயைக்குடிப்பார்." ஐ.மா..பா. இப்பாடிசண்டை போடவும் வேண்டாம்.குடிக்கவும் வேண்டாம் என்பேன்" நான் .
. "இதபார்ர.சண்டை போட்டதே அதுக்குத்தானே" என்பார் அவர்.
மனித நேயத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் மார்க்சிசம் என்பார்கள் .அதை இந்த தேசபக்தர்கள் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டேன் .
இவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்கின்றோம் என்ற பெருமையை தவிர வேறன்ன சொல்ல...
ReplyDeleteஏக்கப்பெருமுச்சிதான் விடமுடிகின்றது.