நேற்று மூத்த்த்த்த்த்த்த்த மாலன் நன்றாக மாட்டிக் கொண்டார்.
விக்டோரியா கௌரி நியமனம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவொன்றில் நுழைந்த மாலன், அவருக்கே உண்டான குயக்தியோடு பிரச்சினையை திசை திருப்பும் வண்ணம் இதற்கு முன்பும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாகியுள்ளனர் என்று ஒரு பட்டியல் போட்டார்.
என்ன ஒரு அயோக்கியத்தனம்!
விக்டோரியா கௌரியின் மத வெறி, வன்மப் பேச்சுக்கள்தான் காரணம் என்று தெரிந்தும் அவர் அரசியல் கட்சியில் இருப்பதால்தான் எதிர்க்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முனைகிறார். இது அப்பட்டமான சங்கித்தனம்.
அதனால்தான் உடனடியாக மூத்தவருக்கு சூடாக ஒரு பதில் கொடுத்தேன்.
அதன் பிறகு இன்னும் சிலரும் மாலன் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டு விட்டார்கள்.
ஆனாலும் மாலன் அடங்க மாட்டார். அயோக்கியத்தனத்தை தொடர்வார். ஆமாம் அதுதான் அவருக்கு பிழைப்பு. ஆனால் இந்த பிழைப்பிற்கு பதிலாக அவர் . . . . . . . . . . .
No comments:
Post a Comment