மேலே உள்ளது இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தை ராமர் கோயிலுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த ஆலமரத்தடி பஞ்சாயத்தில் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்படவுள்ள மசூதி, மருத்துவமனை, கல்வி நிலையம் ஆகியவற்றின் மாதிரி இது.
ஆனால் இதை கட்ட முடியுமா? கட்ட அனுமதிப்பார்களா?
இந்த வருடத்தில் ராமர் கோயிலை திறந்து வைத்து மோடி அதனை தன் சாதனையாக ஓட்டே கேட்கப் போகிறார்.
ஆனால் மசூதி?
ராமர் கோயிலில் இருந்து 25 கிலோ மீட்டர் தள்ளி ஒரு இடத்தை ஒதுக்கி உள்ளார்கள்.
மசூதி கட்ட விண்ணப்பம் கொடுத்து ஆறு மாதம் கழித்து அதனை ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு பல்வேறு அரசாங்க துறைகளில் இருந்து தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளனர்.
அவை அனைத்தும் முடித்த பின்பு இப்போது மேலும் இரண்டு காரணங்கள் சொல்லியுள்ளனர்.
கட்டப்படும் மசூதிக்கு முன்பாக 12 மீட்டர் அகல சாலை இருக்க வேண்டும். 11 மீட்டர்தான் உள்ளது. அதனால் முடியாது. சாலையை அகலப்படுத்த பணம் கட்டினாலும் அந்த கோப்பு தூங்கிக் கொண்டிருக்கிறது.
அடுத்த காரணம். மசூதி கட்டப்படவுள்ள நிலம், விவசாய நிலம். ஆகவே அனுமதி கிடையாது. இந்த இடத்தை ஒதுக்கியதே மொட்டைச்சாமியார் அரசுதான். ஆனால் அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதி கிடையாதாம்.
ஊடகங்கள் கேள்வி கேட்டதும் அயோத்தி வளர்ச்சி வாரிய ஆணையர் மழுப்பலாக பதில் சொல்லி சமாளித்துள்ளார்.
மசூதியையும் இடித்து அந்த இடத்தையும் கைப்பற்றி அங்கே கோயில் கட்டி திறப்பு விழாவுக்கும் தயாராகிக் கொண்டு,
இடத்தையும் உரிமையையும் இழந்த இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் கூட மசூதி கட்ட தடை போடும் இந்த கேவலமான பேர்வழிகள் கையில் நாடு மீண்டும் சென்றால் என்ன ஆகும்?
No comments:
Post a Comment