வாயைத் திறந்தால் பொய்யைத் தவிர வேறு ஏதுவும் பேசாதவன், ஆணவம் தலைக்கேறி ஆடும் அற்பன், தொலைக்காட்சி விவாதங்களில் பல முறை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் அடி வாங்கி ஓடிப் போனவன், ரயில்வே வாரியத்தில் ஏதோ துக்கடா பொறுப்பில் இருக்கும் திமிரில் அராஜகம் செய்தவனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளருமான தோழர் கே.சாமுவேல்ராஜ் தட்டிக் கேட்க, கட்டுக்கதைகளை அள்ளி வீசியுள்ளான் திருப்பதி நாராயணன் எனும் அற்ப சங்கி.
இவர்கள் நம்பும் புராணத்தில் கடவுளையே கேள்வி கேட்ட கதைகள் உள்ள போது பிரதமரை விமர்சிக்கக் கூடாதாம். அவ்ளோ பெரிய அப்பாடக்கரா மோடி?
இனியாவது வாயை அடக்கு திருப்பதி நாராயணா!
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுத்திடுக!
தென்னக ரயில்வே காவல்துறைக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
*****
நேற்று ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சக பயணியர் ஒருவரை பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “தூக்கிவிடுவேன், நான் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்” என்றெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார்.
இதை சகித்துக் கொள்ள முடியாமல் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் நாராயணன் திருப்பதியை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதற்கு பதிலாக ஆளும் கட்சி என்ற அதிகாரத்தையும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பையும் தவறாக பயன்படுத்தி காவல்துறையை ஏவி விட்டு கே.சாமுவேல்ராஜை ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பாஜகவுக்கு அஞ்சி ரயில்வே போலீஸ் நடந்து கொண்டவிதம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
பொதுவாழ்க்கையில் இருக்கிற யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல ; கருத்து சுதந்திரம், அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள உரிமையாகும். சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்கவே கூடாது. இந்நிலையில் பிரதமரை விமர்சித்தால் காவல்துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையுமே காட்டுகிறது. இத்தனையும் செய்துவிட்டு கே.சாமுவேல்ராஜ் பேசியதை வெட்டியும், திரித்தும் வெளியிட்டு அவர் குற்றம் செய்துவிட்டதைப் போல பொதுவெளியில் பதிவிடுவதை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது.
தென்னக ரயில்வே காவல்துறை, இச்சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீதும், சக பயணிகளை மிரட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
- கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
பிகு: நேற்று கூட பாஜக போலீஸை வைத்து டெல்லியில் ஒரு அயோக்கியத்தனம் செய்துள்ளது. அது பற்றி மாலை . . .
No comments:
Post a Comment