பாஜகவின் மகளிர் அணி
பொதுச்செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி என்பவரை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக்க
உச்ச நீதிமன்ற கொலோஜியம் செய்துள்ள பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என்று 21 மூத்த
வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
“அவர் நல்லவரு, வல்லவரு”
என்று ஒரு கூட்டம் கிளம்பி விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி சந்துரு, ஹரி பரந்தமன் எல்லாம்
நீதிபதியா இருந்தாங்களே” என்று வேறு நியாயம் கேட்கிறார்கள்.
மூத்த வழக்கறிஞர்
தோழர் என்.ஜி.ஆர். பிரசாத், விக்டோரியா கௌரி ஏன் வேண்டாம் என்பதற்கு அழகான விளக்கம்
ஒன்றை கூறியுள்ளார்.
“விக்டோரியா கௌரி,
பாஜக என்பதற்காக மட்டும் அவர் நீதிபதியாகக் கூடாது என்று சொல்லவில்லை, அவர் தொடர்ச்சியாக மத வெறிக் கருத்துக்களை பேசிக்
கொண்டிருக்கிறார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்குவது அவருக்கு வாடிக்கை.
இப்படிப்பட்ட ஒருவர் நீதிபதியானால் அவர் எப்படி நியாயமாக இருப்பார்? மேலும் சந்துருவும்
ஹரி பரந்தாமனும் நீதிபதியாவதற்கு இருபதாண்டுகள் முன்பே கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
வெளியேறி விட்டனர். அவர்கள் யாரும் இவர் போல வெறுப்புப் பேச்சுக்களை வேறு யாரும்
பேசியதில்லை”
ஒரு எம்.ஆர்.ராதா
வசனம் ஒன்று உண்டு. காலம் முழுதும் வக்கீலாக
பொய் சொல்லிக் கொண்டிருந்த ஒருவர் நீதிபதியான பின்பு மட்டும் எப்படி நேர்மையாக ந்டந்து கொள்வார்?
இதே கேள்விதான் விக்டோரியா
கௌரிக்கும் . . .
ஏற்கனவே மதுரை பெஞ்சில்
ஒருவர் படுத்திக் கொண்டிருக்க இன்னொரு சங்கியுமா!
கோலோஜியம் தன் பரிந்துரையினை
திரும்பப் பெறுவதுதான் நீதித்துறைக்கு நல்லது.
பிகு : பதிவை பகிரும்
வேளையில்தான் இந்த அம்மையாரின் நியமனத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்த தகவல் வருகிறது.
இத்தனைக்கும் இந்த நியமனத்திற்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மற்ற நீதிபதிகளின்
நியமனங்களை கிடப்பில் போடும் ஒன்றிய அரசு, இந்த நியமனத்திற்கு மட்டும் உடனடி ஒப்புதல்
தருவதே வில்லங்கத்திற்கு சான்று.
No comments:
Post a Comment