ஜோஷிமத்தின் நிலைமை பற்றி முன்னரே எழுதியிருந்தேன். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் கீழே உள்ள இணைப்பின் மூலமாக அந்த பதிவை கொஞ்சம் படித்து விட்டு பாருங்கள்.
ஏற்கனவே ஜோஷிமத் இன்னும் நான்கு செண்டி மீட்டர் அளவிற்கு புதையுண்டுள்ளது. சாலைகள் பிளவுண்டு கிடக்கிறது. வீடுகளின் விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் வீடுகளை இழந்து கொண்டே இருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் சார்தம்
யாத்திரையை நடத்தியே தீருவதென்று உத்தர்கண்ட் மாநில பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.
சாலைகளின் பாதிப்புக்கள்
இன்னும் சரி செய்யப்படவில்லை, வீடுகளில் விரிசல்கள் நிற்கவே இல்லை, ஏற்கனவே வீடிழந்தவர்கள்
விடுதிகளில்தான் தங்கியுள்ளனர், ஊருக்கு வரும் பக்தர்கள் எங்கே தங்குவார்கள்? இன்றைய
சூழலில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் அதை ஊர் தாங்குமா?
இதெல்லாம் ஜோஷிமத்
மக்கள் கேட்கும் கேள்விகள்.
இவை எதற்கும் பதில்
இல்லை.
பதில் சொல்ல தயாராக
இல்லை.
அவர்கள் நோக்கம் ஒன்றுதான்.
யாத்திரை நடத்தி கல்லா
கட்டுவது மட்டுமே இவர்கள் நோக்கம்.
No comments:
Post a Comment