Sunday, February 5, 2023

அமாவாசைகள் நிச்சயம் வீழும்.

 




அதிகாரத்தை கைப்பற்ற
ஆசை வார்த்தைகள் கூறுவார்,
தன்னையன்றி
நல்லவர், வல்லவர் யாருமில்லை
என்று நம்பும்படி நடிப்பார்.

ஆயிரம் பொய்கள் சொல்வார்,
ஆளுக்கேற்றார் போல பேசுவார்,
எதிலும் கிடையாது உண்மையென்பதே,

தேவைக்காக
சேர்வதும் சேர்த்துக் கொள்வதும்
தேவை முடிந்த பின்
கழன்று கொள்வதும் கழட்டி விடுவதும்
வாடிக்கையான விளையாட்டு.

எவர் இங்கே அமாவாசை?
பொய்மையும் கயமையும்
அடுத்தவரை அழித்து
சுகமாய் வாழ நினைக்கும்
எல்லோருமே இங்கே அமாவாசை!

ஆனாலும் அமாவாசைகள் நிலைப்பதில்லை.
பொய்களும் நாடகமும்
எப்போதுமே வென்று கொண்டிருப்பதில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே
மௌனமாய் கடக்க மாட்டார்கள்.

சென்ற வேகத்தை விட
சரிவின் வேகம் 
இன்னும் அதிகமாகும்.

வீழும் அமாவாசைகள் கண்டும்
இதர அமாவாசைகள் திருந்த மாட்டார்கள்.
அமாவாசைகளின் கட்டமைப்பு அப்படி . . .

ஒரு அமாவாசை இப்போது வீழ்ந்தது.
ஏற்றி விட்ட இன்னொரு அமாவாசையும்
மிக விரைவில் . . .
இருப்பினும் தொடரும்
வேறு அமாவாசைகளின் ஆட்டம்,
வீழும் நாள் நெருங்கும் வரை . . .
 

 

 

No comments:

Post a Comment