நேற்று சமூக வலைத்தளங்களின்
கவனம் முழுதும் காதலர் தினத்தை பசு கட்டிப்பிடி தினமாக அறிவித்ததையே மையமாகக் கொண்டிருந்தது. அந்த பரபரப்பில் மோடி நேற்று
ஆற்றிய வீர உரையில் அதானி பற்றி வாய் திறக்காதது பின்னுக்கு போய் விட்டது. விமர்சகர்களின் கவனத்தை திசை திருப்பவே கௌ ஹக் டேவை
அறிவித்திருக்கலாம் என்ற சந்தேகம் நியாயமானதுதான். ஏனென்றால் அது போன்ற கேடித்தனத்தை
மோடித்தனம் என்றழைக்கக் கூடிய விதத்தில் கேலை பார்த்தவர்கள்.
நேற்றில்லாவிட்டால்
என்ன, இன்று கேட்போமே!
ஊழலை ஒழித்ததாக சொல்லும்
மோடியே, உன் நண்பன் அதானிக்கு இல்லையில்லை உன் எஜமானன் மோடியின் சொத்துக்கள் மூன்றாண்டுகளில்
கிட்டத்தட்ட 2000 மடங்கு உயர்ந்தது உன் அரசின் ஊழலின் வெளிப்பாடுதானே!
அதானிக்கு கடன் கொடுத்த
வங்கிகள் இன்று விழி பிதுங்கி காட்சி அளிக்கிறதே! அதற்கு காரணம் யார்?
அதானி பங்குகளை விற்காததால்
எல்.ஐ.சி க்கு நிஜமான நஷ்டம் கிடையாது, அனுமான நஷ்டம்தான், 42 லட்சம் கோடி ரூபாய் சொத்து
வைத்திருப்பதால் 36,000 கோடி ரூபாய் பெரிய
தொகையும் கூட கிடையாது. ஆனால் அதானி மற்ற குஜராத் முதலாளிகள் போல வெளிநாட்டுக்கு
ஓடிப் போனால் அப்போது நிஜமாகவே நஷ்டம் வருமே,
அதற்கு யார் பொறுப்பு”?
விமான நிலையங்களையும்
துறைமுகங்களையும் அதானிக்கே அள்ளிக் கொடுத்தீர்க்ளே, அந்த ஊழலை செய்தது யார்?
நாடாளுமன்றமே முடங்கிப்
போனாலும் அதைப் பற்றி கவலையில்லை, எதிர்க்கட்சிகள் எல்லாம் கழுவி கழுவி ஊற்றினாலும்
கவலையில்லை, இந்தியப் பொருளாதாரம் நாசமாகிப் போனாலும் கவலையில்லை, முதலீடு செய்த நிறுவனங்கள்
அழிந்து போனாலும் கவலையில்லை, என் வாயிலிருந்து என் முதலாளி அதானி பற்றி ஒரு வார்த்தை
வராது, அதானியை பாதுகாப்பதுதான் என் கடமை என்று நாடாளும்ன்றத்தில் வாய் திறக்காத மோடியே, சமீபத்தில் படித்த ஒரு ஆப்பிரிக்க
பழமொழியோடு பதிவை முடித்துக் கொள்கிறேன்.
திருடனைப் பார்த்து
குரைக்க வேண்டியது நாயின் கடமை. வாலை ஆட்டினால் அந்த நாய் திருடனின் கூட்டாளி.
இது ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும் மோடி
No comments:
Post a Comment