Saturday, February 4, 2023

மூவருக்கும் அஞ்சலி

 


நேற்று இரண்டு கலைஞர்கள் மறைந்தார்கள். இன்று ஒருவர்.

தெலுங்கு திரையுலகை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் திரு கே.விஸ்வநாத். சங்கராபரணம் படம் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தியவர். கமலஹாசனின் நடனத்திறமையை சலங்கை ஒலியில் முழுமையாக பயன் படுத்திக் கொண்டவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். தமிழில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் திரு கே.விஸ்வநாத். 

பரியேறும் பெருமாள் படம் நலிவடைந்த கிராமியக் கலைஞரான திரு நெல்லை தங்கராஜிற்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது. தமுஎகச அமைப்பு "நாட்டுப்புற கலைச்சுடர்" விருதை அவருக்கு வழங்க முடிவு செய்த போது தகவல் தெரிவிக்க அவரிடம் அலைபேசி கூட இல்லை. நேரில் சென்ற தமுஎகச மாநிலத் தலைவர்களில் ஒருவரான தோழர் நாறும்பூநாதன் அவர் வீட்டிற்குச் சென்ற போது மின்சார வசதியில்லா குடிசை வீடு என்ற நிலையை அறிந்தார். நெல்லை மாவட்ட ஆட்சியரின் உதவியோடு தமுஎகச முயற்சியில் அவருக்கு ஒரு வீடு கட்டித்தரப்பட்டது. பாவம்! ஒரு வருடம் கூட அவரால் அந்த வசந்தத்தை அனுபவிக்க முடியவில்லை. நேற்று மறைந்து விட்டார்.

திருமதி வாணி ஜெயராம் அவர்களைப் பற்றி அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட போது எழுதி பத்து நாட்கள் கூட முடியவில்லை. அந்த விருதைப் பெறுவதற்குள் அவர் மறைந்து விட்டார்.

மூவருக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலி.

திரு கே.விஸ்வநாத் இயக்கிய சங்கராபரணம் படத்தில் திருமதி வாணி ஜெயராம் தேசிய விருது வென்ற பாடலின் காணொளி கீழே.


காணொளி சரியாக வரவில்லையென்றால் யூட்யூப் இணைப்பு கீழே.

https://www.youtube.com/watch?v=xD-HxMMzoBE&list=RDxD-HxMMzoBE&start_radio=1


சலங்கை ஒலி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் கூட இங்கே .



https://www.youtube.com/watch?v=59AejwbI41s

No comments:

Post a Comment