திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்கள் உடைக்கப்பட்டு எழுபத்தி ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அந்த கொள்ளை பற்றி காவலர்கள் கொன்னது சுவாரஸ்யமாகவும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை நினைவு படுத்துவதாக அமைந்திருந்தது.
திரைப்படத்தில் ராஜஸ்தான் பவாரியா கும்பல் கொள்ளையடித்தது. திருவண்ணாமலையில் கொள்ளையடித்தது ராஜஸ்தான் மேவார் கும்பலாம்.
தீரன் படம் போலவே ராஜஸ்தான் தொடங்கி மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், மஹாராஷ்டிரா, கர்னாடகா என்று வரிசையாக ஜனவரி கடைசி வாரம் தொடங்கி பிப்ரவரி இரண்டாம் வாரம் வரையில் 13 ஊர்களில் ஏடிஎம் கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவாம்.
திரைப்படத்தில் கொள்ளையர்கள் லாரியில் வருவார்கள் என்றால் இங்கே ஒரே ஒரு சொகுசு கார் மட்டுமே.
திரைப்படத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடுகளில் கொள்ளையடிப்பார்கள் என்றால் இந்த கொள்ளையர்களோ சிசி டிவி காமெர கண்காணிப்பு உள்ள நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து கிராமப்புற சாலைகளில்தான் பயணிப்பார்களாம்,
மேவார் கும்பலைப் பிடிக்க எந்த தீரன் ராஜஸ்தான் செல்லப் போகிறாரோ?
பிகு: ரொம்பவும் சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கிறோமே என்று கொஞ்சம் ரிலாக்ஸ்டாக எழுதிய பதிவு இது. இதே செய்தியிலேயே கவலைப் படக் கூடிய விஷயம் ஒன்றுண்டு. அது நாளை. .
No comments:
Post a Comment