ஒரு
சார்புத் தன்மையோடு மட்டும் எடுத்த ரோஜா படம் பார்த்த போது மணிரத்தினத்தின் மீது ஒரு
எரிச்சல் வந்தது. பம்பாய் படத்தில் நடுநிலை என்ற பெயரில் செய்து கொண்டிருந்த சில சமரசங்கள்
அந்த எரிச்சலை அதிகரிக்க வைத்ததால் அதற்குப் பிறகு மணிரத்தினத்தின் படங்களை பார்ப்பதில்லை.
பதிவு
எழுதிய புண்ணியவானும் சரி, பின்னூட்டம் போட்ட புத்திசாலிகளும் சரி, எதையும் பார்க்காமலே
எழுதியுள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
சங்கிகள் என்பவர்கள் அடிமுட்டாள்களும் அயோக்கியர்களுமானவர்கள்.
நாம்
தமிழர் கட்சியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் குத்தகை எடுத்துள்ளார்கள். அது போல மதச்
சான்றிதழ் வழங்கும் குத்தகையை சங்கிகள் எடுத்துள்ளார்கள். இவர்களுக்கு பிடிக்காதவர்களை
இவர்களே மதம் மாற்றி விடுவார்கள்.
பம்பாய்
படத்தில் “காவி சார் நிலை” எடுத்ததுதான் மணிரத்தினத்தை பிடிக்காமல் போனதற்கான காரணம்.
ஆனால் காவிகளே இப்போது அவருக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார்கள்.
ஏன்?
சில
மாதங்கள் முன்பாக கருத்துரிமையை நசுக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து சில படைப்பாளிகள் கையெழுத்திட்டு மோடிக்கு ஒரு கடிதம்
அனுப்பியிருந்தார்கள். அதிலே கையெழுத்திட்டவர்களில் மணிரத்தினமும் ஒருவர்.
மோடியை
கண்டிக்கலாமா?
மோடியை
கண்டிப்பவர்கள் தேச விரோதிகள், ஜிஹாதிகள், மிஷனரிகள், அர்பன் நக்ஸலைட்டுகள்.
இதிலே
மணிரத்தினத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முத்திரை மிஷனரி. அவ்வளவுதான்.
இப்போதே
இப்படி! இவர்கள் மொண்டு வந்துள்ள மசோதாவை நிறைவேற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும்.
முன்னொரு
காலத்து “நியூஸ் ரீல்” போலத்தான் திரைப்படமே இருக்கும்.
வரட்டும் பார்க்கலாம். இப்போதே விமர்சனம் எழுதி படத்திற்கு விளம்பரங்கள் தர வேண்டாம் அன்பரே. அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDeleteWell analysed
ReplyDeleteWell analysed
ReplyDelete