Sunday, August 1, 2021

41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் . . .

 


1980 ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

அதற்குப் பிறகு நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா அரை இறுதிச் சுற்றுக்குள் நுழையவே இல்லை.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்போட்டியில் விளையாட  தகுதி பெறாத துயரம் கூட உண்டு.

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் ஹாக்கியில் எட்டாவது இடம்தான்.

நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அபாரமான திறமையை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாஸ்கோவில் நிகழ்த்திய சாதனை மீண்டும் டோக்கியோவிலும் நிகழட்டும்.



வெண்கலப் பதக்கம் வென்று இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியரான பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் வயது இருக்கிறது. அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் பெறலாம். 

No comments:

Post a Comment