ஆப்கானிஸ்தான் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. அமெரிக்கா உள்ளே புகுந்த எந்த நாடும் உருப்படாது என்பதற்கு ஆப்கான் ஒரு உதாரணம். தாலிபன் கையில் ஆப்கான் மக்களை நிராதாரவாக விட்டு விட்டு அமெரிக்க புறமுதுகு எடுத்து ஓடியுள்ளது.
இது பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும்.
நிற்க
ஜூன் மாதம் எழுதிய பதிவையே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
தாலிபனுடன் என்ன டீலிங் மோடி?
இப்போதுதான் ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.
கத்தார் நாட்டின் சிறப்பு தூதர் "முத்லக் பின் மெஜெத் அல் கொரானி" என்பவர் ஒரு கருத்தரங்கில் சொன்ன அதிர்ச்சி தகவல்.
கத்தார் நாட்டின் தோஹா நகரில் தாலிபன் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைமையை இந்திய தூதுக்குழு இரண்டு முறை சந்தித்து விவாதித்துள்ளது. அந்த சந்திப்பு நடந்த நேரங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தோஹாவில்தான் இருந்துள்ளார்.
இது பற்றி விளக்கம் கேட்டதற்கு வெளியுறவு அமைச்சகம் பதில் சொல்ல மறுத்து விட்டதாம்.
ஒரு பயங்கரவாதக்குழுவோடு மோடி அரசு விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்ன விவாதித்தது? உண்மைகளை மறைப்பது ஏன்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வராது என்பதற்காக நம்மால் கேட்காமல் இருக்க முடியாதல்லவா?
பாமியான் புத்தர் சிலையை உடைத்த தாலிபனும் பாபர் மசூதியை இடித்த பாஜவும் ஒன்றுதானே!
அவர்களுக்குள் ஏதாவது தொழில் நுட்ப பரிமாற்றம் ஏதாவது இருக்கும்!
அதே கேள்வியையும் மீண்டும் எழுப்புகிறேன்.
தாலிபனோடு இந்தியா என்ன பேசியது? உங்களுக்கு இடையில் என்ன டீலிங்?
No comments:
Post a Comment