உடல் வலி போக்கும் உருண்டை பிடிக்கும் முயற்சியில் கை வலி வந்த சோகத்தையும் கால் பங்கு அளவு மாவு அப்படியே கொர கொர என்றே இருந்த சோதனையையும் நேற்று முன் தினம் எழுதியிருந்தேன்.
புட்டு
போல செய்வது
களி
போல செய்வது.
பிடிக்
கொழுக்கட்டை செய்வது.
கொஞ்சம்
வெல்லத்தை நிறைய தண்ணீர் சேர்த்து பாகு வைத்து தேங்காயையும் சேர்த்து அதிலே அந்த கால்
பங்கு மாவை போட்டு நன்றாக கிளறி, அது ஆறியதும் அதை கையிலேயே தட்டை போல தட்டி இட்லி
தட்டில் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
ஆனால்
அவ்வாறு வரவில்லை. ஏற்கனவே மாவில் இருந்த வெல்லத்தோடு புதிய வெல்லமும் கூடியதால் அதன் அளவு அதிகமாகியதன் விளைவு என்று புரிந்தது.
சரி,
போதும் விடுங்கள், அப்படியே சாப்பிடலாம் என்று மனைவி சொன்னாலும் மனது கேட்கவில்லை.
கற்றுக்
கொண்ட வித்தைகளை இறக்கும் வேளை இதுதான் என்று முடிவு செய்தேன்.
அடுப்பின்
ஒரு பக்கத்தில் கொஞ்சமாக நெய் ஊற்றி ரவாவை வறுக்க இன்னொரு பக்கத்தில் தண்ணீரை கொதிக்க
வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ரவாவில் சுடு தண்ணீர் சேற்று கிளற அதிலே கொழுக்கட்டையாகாத
அந்த வஸ்துவையும் சேர்த்து கிளற கெட்டியாக ஆன பின்பு ஆறிய பின்பு இட்லி தட்டில் வேக
வைத்தேன்.
இம்முறை
மிகவும் நன்றாகவே வந்து விட்டது.
விக்ரமாதித்தனின்
விடா முயற்சிக்கு வெற்றி.
No comments:
Post a Comment