நீங்கள் இவ்வாறு வெளிப்படையாக பேசியுள்ளது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.
ஆனாலும் பயமாகவும் இருக்கிறது.
உங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்ற பயம்தான். நீதிபதி லோயாவும் நினைவுக்கு வருகிறார், ஜார்கண்டில் இறந்த உத்தம் ஆனந்தும் நினைவுக்கு வருகிறார்.
இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.
ஆளும்கட்சிக்கு ஆதரவாக தலைமை நீதிபதி செயல்படுகின்றார் என்று நான்கு நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம் சுமத்தினார்கள். அவர்களில் ஒருவரே தலைமை நீதிபதியானார். அவர் சபல புத்திக்காரரோ அல்லது வலையில் வீழ்ந்தவரோ, அவர் மீதான பாலியல் புகாருக்கு அவரே நீதிபதியானார். பின் ஆட்சிக்கு நெருக்கமாகி தீர்ப்புக்களை வாரி வழங்கி நாடாளுமன்ற உறுப்பினராய் சன்மானமும் பெற்றார்.
ஸ்டார்ட்டிங் நல்லா இருந்தாலும் ஃபினிஷிங் மோசமாகிடக் கூடாது என்ற பயம் இருந்துக்கிட்டே இருக்கு!
என்ன சார் செய்ய???/
No comments:
Post a Comment