பாஜகவின் முக்கியமான தலைவரான கேடி
ராகவனின் காணொளி காட்சி இன்று பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாஜக
தலைவர்கள் காணொளி வலைகளில் சிக்கிக்
கொள்வது ஒன்றும் புதிதல்ல.
லஞ்சப்பணத்தை டாலர்களில் கேட்டார்
பாஜக அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு லட்சுமண். “பணம்தான் கடவுள்” என்று
கையில் மதுக் கோப்பையோடு கம்பீரமாக சொன்னார் இன்னொரு மந்திரி, பி.சி.கந்தூரி அவர்
பெயர் என்று நினைவு. ஆபாசப்படங்களை சட்டப்பேரவையில் பார்த்து முன்பு எம்.எல்.ஏ
பதவி இழந்தவர்கள் இப்போது கர்னாடக மாநிலத்தில் அமைச்சர்கள். ஆகவே பாஜகவிற்கு
இதெல்லாம் புதிதல்ல. அசிங்கமாக மாட்டிக் கொள்ள அவர்களால் மட்டுமே முடியும்.
இங்கே கேடி ராகவனை சிக்க வைத்ததும்
இன்றைய தேதியில் பாஜக உறுப்பினராக இருக்கிற மதன் ரவிச்சந்திரன் என்பதாலும்
வீடியோக்கள் வெளியிடப்படும் என்பது ஆட்டுக்கார அண்ணாமலைக்கு தெரியும் என்பதாலும்
சங்கிகள் அடக்கி வாசிக்கிறார்கள். அண்ணாமலை, குஷ்பு ஆகியோரோடு அதே நாளில் பாஜகவில்
இணைந்தவர் மதன் ரவிச்சந்திரன் என்பதும் முக்கியம்.
அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகரானால்
கோயில்களின் புனிதம் கெட்டு விடும், கடவுள் கோபித்துக் கொள்வார் என்று பேசிய
கட்சியின் முக்கியத் தலைவர் கடவுளை மதிக்கவில்லை அல்லது நம்பவில்லை என்பதே
கேடி.ராகவன் வீடியோ உணர்த்துகிற உண்மை. கேடி ராகவனுக்கு காஞ்சிபுரம் தேவநாதனே
குருநாதன். பாஜக கட்சியின் கலாச்சாரக் காவலர்கள் நாடகத்தை இனியாவது அப்பாவி மக்கள்
நம்பாமல் இருக்க வேண்டும்.
இந்த கே.டி.ராகவன் வீடியோ நமது
கவனத்தை அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி விடக் கூடாது.
கொரோனா மூன்றாம் அலை,
பெட்ரோல் விலை உயர்வு,
விவசாயிகள் போராட்டம்,
பொதுத்துறை விற்பனை,
ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனம் மாறி விட்டது என்று அற்ப சந்தோஷம்
சங்கிகள் அடையக் கூடாது.
ஆட்டுக்கார
அண்ணாமலை நியாயஸ்தன் என்று பலர் பேசினார்கள். ஆனால் எனக்கு கர்னாடகா முகம் இருக்கிறது
என்று மிரட்டிய அண்ணாமலையின் அந்த முகத்தை தன் அறிக்கையில் மதன் ரவிச்சந்திரனுக்கு
விடுத்த மறைமுக மிரட்டலில் பார்க்க முடிந்தது.
பிகு : ஏன் இந்த முகப்புப் படம் என்று யோசிப்பவர்களுக்காக . . .
சில வருடங்களுக்கு முன்பாக சபல புத்தி கொண்ட சில அரசியல் தலைவர்கள் பற்றி ஒரு தொடரே வந்தது என்பதை மட்டும் நினைவு படுத்துகிறேன்.
No comments:
Post a Comment