இன்றைய இரண்டு துயரங்கள்
இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில்
படித்த இரு துயரமான செய்திகள் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.
விழுப்புரத்தில் திமுக கூட்டத்திற்கு
கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் பனிரெண்டு வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்து
போனான்.
அந்த குடும்பத்திற்கு இழப்பீடு கொடுத்து சட்டரீதியான பிரச்சினை வராமல்
சமாளித்திருக்கலாம். ஆனால் குழந்தைத் தொழிலாளரை பயன்படுத்தியது என்பது மிகப் பெரிய
தவறு. ஆளும்கட்சியானாலும் தவறு தவறுதான். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட
வேண்டும்.
பூந்தமல்லி பக்கத்தில் ஐந்து சிறுவர்களை
தெரு நாய் கடித்துள்ளது. அதில் நால்வர் தடுப்பூசி
போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு சிறுவனை
மட்டும் அவனது குடும்பத்தினர்
நாட்டு வைத்தியரிடம் கூட்டிச் சென்றுள்ளனர்.
இந்த பையன் மட்டும் உடல் நிலை
பாதிக்கப்பட்டு ரேபிஸ் பீடிக்கப்பட்டு இறந்து போயிருக்கிறான். மற்றவர்கள் நன்றாகவே
இருக்கிறார்கள். பெற்றோரின் மூட நம்பிக்கை பிள்ளையின் உயிரை பறித்து விட்டது.
தெரு நாய் பிரச்சினைக்கு எப்போதுதான் தீர்வு வருமோ?
No comments:
Post a Comment