"அரசியல் சாசனம் உறுதி கொடுத்தாலும் மனித உரிமைகளுக்கும் தனி மனித கண்ணியத்துக்கும் காவல் நிலையங்கள் இன்னும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது. அவர்களின் மூன்றாவது டிகிரி சித்திரவதைக்கு பெரிய மனிதர்கள் கூட விதிவிலக்கல்ல, லாக்கப் சித்திரவதைகளும் காவல்துறை அராஜகமும் இன்றும் தொடர்கிறது".
இதைச் சொன்னது ஏதோ ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவரோ அல்லது மனித உரிமை செயற்பாட்டாளரோ அல்ல.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு என்.வி.ரமணா.
ஏழை மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வருமளவிற்கு நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று மற்ற நீதிபதிகளுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.
இந்த நிலைமை இப்போதுதான் தெரிந்ததா என்று கேட்பதா? அல்லது இப்போதாவது தெரிந்ததே என்று மகிழ்வதா?
உங்களில் ஒருவர் ஜார்கண்டில் ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்ட பின்புதான் உங்கள் நெற்றிக் கண் திறந்துள்ளது. மகிழ்ச்சி.
ஆனால் ஜாக்கிரதையாக இருங்கள் ஜட்ஜய்யா!
இங்கே நீதிபதிகள் கண் முன்னே இரண்டு உதாரணங்கள் உள்ளது.
நீதிபதி லோயா
நீதிபதிகள் சதாசிவம், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா
நீங்கள் யாராக இருக்கப் போகிறீகள்?
No comments:
Post a Comment