இன்னும்
ஏன் இந்த கேவலமான பிழைப்பு?
எப்படியாவது
வெற்றி பெறுவது. அப்படி வெற்றி பெற முடியவில்லை என்றால் வெற்றி பெற்றவனை தன் ஆளாக மாற்றிக்
கொள்வது. அப்படி அதுவும் முடியவில்லை என்றால் தன் ஆள் போல காட்டிக் கொள்வது. பாஜகவின்
இழி குணங்களில் இதுவும் ஒன்று.
இந்த
குணத்தை சமீபத்தில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி விஷயத்தில் காண்பித்துள்ளார்கள்.
இரண்டு
நாட்கள் முன்பாக வாட்ஸப்பில் பரவிய செய்தி என்ன தெரியுமா?
ஆந்திராவில்
ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்றதற்கான காரணம் அவர் இந்துவாக மதம் மாறியதுதான் என்று
அழுத்தமாக சொன்னது. அவரது அப்பா ராஜசேகர ரெட்டிக்கும் சோனியா காந்திக்கும் கடுமையான
அர்ச்சனை. ராஜசேகர ரெட்டி செய்த பாவத்திற்கு
பரிகாரம் பெறவே ஜெகன் மோகன் ரெட்டி இந்துவாக மாறி, கடவுளின் அனுக்கிரகம் பெற்று
முதல்வராகி விட்டார் என்று ரொம்பவே டீப்பாக இருந்தது அந்த செய்திகள். சிருங்கேரி சங்கராச்சாரியார்தான்
மதம் மாற்றி வைத்தார் என்று கூடுதல் தகவல் வேறு. அவர் யாகம் வளர்த்த போட்டோக்கள் நிறைய
இருந்தது.
ஆனால்
அவை அனைத்துமே உடான்ஸ்.
2016ம்
ஆண்டு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதற்காக அவர் ஒரு யாகம் (அது ஒரு
அரசியல் ஸ்டண்ட் என்பதுதான் என் கருத்து) செய்துள்ளார. அந்த புகைப்படத்தை வைத்துக்
கொண்டு ஒரு சிறப்பான திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி விட்டார்கள். அது மட்டுமல்லாமல் அதில் முழுக்க முழுக்க கிறிஸ்துவ
மதத்தைப் பற்றி விஷம் கக்கும் பிரச்சாரம் வேறு.
ஆனால்
ஜெகன் மோகன் ரெட்டியோ நான் தினசரி பைபிள் படிக்கிறேன் என்று சொல்லி அச்செய்தி ஒரு வழக்கமான
கட்டுக்கதை என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.
ஏதேதோ
பிராடு வேலை செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்தாகி விட்டது. அந்த நெத்திக்காசை எடுக்கும்
கேவலமான பிழைப்பை காவிகள் நிறுத்தவே மாட்டார்கள் போல.
என்ன செய்வது, அஃது அவர்களின் ‘பழைய பாதை’! விட முடியாது அவர்களால். :-D
ReplyDelete