ஊழலே இல்லாத நேர்மையான கட்சி பாஜக என்று சங்கிகள் பீற்றிக் கொள்வார்கள், அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அபத்தமான பொய் என்று தெரிந்த போதும் கூட.
கடலை மிட்டாய் முதல் போர் விமானம் வரை ஊழல் செய்யும் உத்தமர்கள் கட்சியில் யாராவது இணைய வேண்டும் என்றால் அதற்கான தகுதி என்ன தெரியுமா?
மிகப் பெரிய மோசடிப் பேர்வழியாக இருக்க வேண்டும்.
சாரதா சிட்பண்ட் ஊழலில் மம்தாவின் வலது கையாக இருந்து சி.பி,ஐ யால் கைது செய்யப்பட்ட முகுல் ராய் பாஜக வில் இணைந்ததும் உத்தம புத்திரன் ஆகி விட்டார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் நால்வர் நேற்று அப்படியே கூண்டோடு கைலாசமாக பாஜகவில் மூழ்கி விட்டனர். மூழ்க அது என்ன நதியா இல்லை சாக்கடையா என்று கேட்காதீர்கள்.
நால்வரில் ஒருவர் வங்கி மோசடி காரணமாக சி.பி.ஐ வழக்கு விசாரணையில் உள்ளவர். இன்னும் இருவர் வீட்டிற்கு இப்போதுதான் வருமான வரித்துறையினர் சோதனைக்குப் போனார்கள்.
கட்சித்தாவல் தடைச்சட்டம் காரணமாக பதவிப் பறிப்பு நடக்கக் கூடாது என்பதற்காக இன்னொருவரையும் அழைத்துப் போய் விட்டார்கள். அவருக்கு என்ன பேரமோ?
"ஊழல் செய்வோரே, ஓடி வாருங்கள் எங்களிடம்"
என்பதுதான்
பாஜக விடுத்துள்ள நற்செய்தி
No comments:
Post a Comment