ஒரு
அனாமதேயத்தின் பின்னூட்டமே (நீக்கப்பட்டு விட்டது) இந்த பதிவை
எழுதத் தூண்டியது.
இன்று கலைஞரின் பிறந்த
நாள்.
அவரின்றி
அவர் குடும்பத்தாரும் அவரது இயக்கத்தினரும் கொண்டாடக் கூடிய முதல் பிறந்த நாள்.
தமிழகத்தைப்
பொறுத்தவரை எந்த அளவிற்கு போற்றப்பட்டாரோ அதே அளவிற்கு தூற்றப்பட்டவரும் அவர்தான்.
அவருடைய பலம் என்று ஒரு பட்டியல் போட்டால் அதே அளவிற்கு பலவீனங்களும் இணைந்து வரும்.
அவருடைய
பேச்சுக்களும் எழுத்துக்களும் எந்நாளும் அவரை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அவரது
அயறாத உழைப்பும் கூர்மைத் திறனும் அனைவருக்குமான ஒரு உதாரணம்.
அவரில்லாத
தமிழகம் சுவாரஸ்யம் இழந்துள்ளது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
அது போல அவர் இல்லாமல் யாராலும் தமிழக வரலாற்றை எழுதவும் முடியாது.
தமிழகத்தின்
தவிர்க்க இயலாத முக்கியமான ஆளுமையான கலைஞரின் நினைவாக அவரது வசனத்தில் வந்த ஒரு காட்சியும்
ஒரு பாடலும்.
பின்
குறிப்பு 1
எத்தனை
முறைதான் பராசக்தி கோர்ட் சீனையே (எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்பதும் இன்றைக்கும்
பொருத்தமானதும் என்பது வேறு விஷயம்) பகிர்ந்து
கொள்வது. அதனால்தான் இந்த முறை மாற்றி விட்டேன்.
பின்
குறிப்பு 2
கடந்த
வருடம் ஒரு சென்னைப் பயணத்தின் போது கடற்கரைச் சாலை வழியே செல்ல நேரிட்டது. அன்றைக்கு
அரை மணி நேர அவகாசமும் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞர்
நினைவிடத்திற்குச் சென்றேன்.
மரணத்திற்குப்
பின்னும் அவர் பெற்ற வெற்றியையும் எடுபிடி அடிமை அரசின் சில்லறைத்தனத்தையும் அந்த நினைவிடம் காலம் முழுதும் சொல்லிக் கொண்டே இருக்கும்.
பின்
குறிப்பு 3
மேலே
உள்ள ஓவியம் ஓவியர் தோழர் ரவி பாலேட் அவர்கள் தீட்டியது. அவருக்கு நன்றி சொல்லி பகிர்ந்து
கொள்கிறேன்.
பின்
குறிப்பு 4
கலைஞர்
நினைவிடத்திற்குச் சென்றாலும் சசிகலா ஓங்கியடித்து சபதம் செய்த, ஓபிஎஸ் தர்ம யுத்த
நாடகம் நடத்திய ஜெ நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவேயில்லை.
No comments:
Post a Comment