Sunday, June 23, 2019

இது கசப்பான "அல்வா"


ஆள்வோர்கள் மாறினாலும்
அமைச்சர்கள் மாறினாலும்
"அல்வா" தயாரிப்பது மட்டும்
மாறுவதே இல்லை.

வரிச்சலுகை,
வரி விடுமுறை,
ஊக்கத் தொகை,
உள்ளதெல்லாம் தள்ளுபடி
என
நெய் சொட்டும் 
"அல்வா"வாய் 
முதலாளிகளுக்குச் செல்வதும்
மாறுவதே இல்லை.

ஏழை, எளிய மக்களுக்கு
காணக்கூட கிடைக்காத
காலிப் பாத்திரம்
என்பதிலும் மாற்றம் இல்லை.

பிகு: மக்களை வணங்கி ஓட்டு கேட்காத
ஒருவர் அல்வாச் சட்டியை வணங்குகிறார்

3 comments:

  1. இந்தியாவிற்கு வந்த சோதனையா தோழர்? எந்த நிதியமைச்சரும் கையெடுத்து கும்பிட்டு ஓட்டு வாங்கலை

    ReplyDelete
    Replies
    1. இது ஓட்டுக்கு கேட்க்கும் வணக்கம் இல்லை

      Delete
  2. மக்கள்நலன் சார்ந்த சிந்தனை அற்ற ஒரு அமைச்சர்,அமைச்சராக யார் வேண்டுமானாலும் ஆகட்டும்,ஆனால் யாருக்காக பொறுப்புக்கு வந்தோமோ அவர்களுக்காக செயல்பட முயல வேண்டும்,நடப்பு வேறாக உள்ளது,மக்கள் என்று விழீத்து..

    ReplyDelete