ஜெய்
ஸ்ரீராம் – ராமர் மீது பக்தி உள்ளவர்களின் முழக்கம் என்று கருதப்பட்ட முழுக்கம் அயோத்தி கோயில் பிரச்சினையை சங்கிகள் அரசியல் ஆதாயத்திற்காக
கையிலெடுத்த பின்பு அரசியல் முழக்கமானது.
மோடி
மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் அது கலவரக்காரர்களின் முழக்கமாக மாறியது.
ஆம்
தேர்தல்
முடிவு வெளி வந்தவுடன் இஸ்லாமியர்கள் மீது நடைபெற்ற நான்கு தாக்குதல் சம்பவங்களின்
போதும் சங்கிகள் அவர்களை “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிடச் சொல்லியே தாக்கியுள்ளார்கள்.
மக்களவை
உறுப்பினர்கள் பதவியேற்கையில் அது வெறுப்பின் அடையாளமாக, திணிப்பின் அடையாளமாக மாறியது.
ஆம்
தமிழ்
வாழ்க என்றும் தந்தை பெரியார் வாழ்க என்றும் அண்ணல் அம்பேத்கர் வாழ்க என்றும் சொல்லி
பதவியேற்றவர்களுக்கு “ஜெய் ஸ்ரீராம்” என்று சொல்லி எதிர் வினையாற்றி தங்களின் வெறுப்பை
வெளிப்படுத்தினார்கள்.
இப்போது
அது கொலைகாரர்களின் முழக்கமாக மாறி விட்டது.
ஜார்கண்ட்
மாநிலத்தில் மாட்டுக் குண்டர்களால் கொல்லப்பட்ட
தப்ரீஸ் அன்சாரி என்ற இளைஞனையும் முழக்கமிடச்
சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
நாளை
ராமர் இங்கே வந்தால் கூட “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தைக் கேட்டால் தன் உயிரைக் காத்துக்
கொல்ல ஓட்டம் பிடித்து விடுவார்.
No comments:
Post a Comment