Friday, June 14, 2019

செவ்வணக்கம் தோழர் முகில்




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவராக பல்லாண்டுகள் செயல்பட்ட தோழர் முகில் இன்று காலமானார் என்பது துயரமான செய்தி.

அறிவொளி இயக்கத்திலும் அறிவியல் இயக்கத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் முகில் நல்ல கவிஞர், பாடகர், நாட்டுப்புற பாடல்கள் ஆய்வாளர், வெண்மணி சம்பவம் குறித்து “ராமையாவின் குடிசை” என்ற நாடகத்தை எழுதியவர்.

எங்கள் சங்கத்தோடு மிகவும் நெருக்கமானவர். ராணிப்பேட்டையிலும் நெய்வேலியிலும் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்க மாநாடுகளின் ஒரு பகுதியான மக்கள் ஒற்றுமை கலை விழாக்களில் உரை வீச்சு நிகழ்த்தியவர்.

எட்டு வருடங்களுக்கு முன்பாக 30.01.2011 ம் வருடம் ஐந்தாவது தமிழ் மாநில மகளிர் மாநாட்டை வேலூரில் நடத்தும் பொறுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்ட போது ஒரு மகளிர் சேர்ந்திசைக்குழுவை உருவாக்கினோம்.. அந்த குழுவிற்கு தொடர்ச்சியாக பயிற்சி அளித்து அந்நிகழ்வில் மூன்று பாடல்களை சிறப்பாக பாடவைத்து பாராட்டுக்களை பெற வைத்தவர் தோழர் முகில் அவர்களே.

அதன் பிறகும் சேலத்தில் மாநில மகளிர் கலை விழா நடந்த போதும் எங்கள் தோழர்களுக்கு பயிற்சி அளித்தார்.

ராணிப்பேட்டை பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக பணியாற்றியவர் அவர். அதிகார வர்க்க மனோபாவத்தை ஒரு போதும் தன் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இறுதி நாள் வரை தோழமை உண்ர்வோடு வாழ்ந்த

தோழர் முகில் அவர்களுக்கு செவ்வணக்கம்.






No comments:

Post a Comment