Wednesday, June 5, 2019

பீகார் - சுவாரஸ்யமா போகுதே . . .



சி.பி.ஐ மூலமாக லாலு-நிதீஷ் குமார் கூட்டணியை உடைத்து அங்கே போய் ஒட்டிக்கொண்டது பாஜக.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமார் கட்சிக்கு ஒரே ஒரு மந்திரி, அதுவும் காசு பார்க்க வழியில்லாத துறை என்று சொல்ல "சீ, சீ இந்தப்பழம் புளிக்கும்" என்று ஆணியே வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டு விட்டது.

அடுத்து பீகார் மந்திரிசபையை விரிவு படுத்திய நிதிஷ் தன் கட்சியிலிருந்த எட்டு பேரை மந்திரியாக்கி பாஜகவுக்கு ஒரு மந்திரி கூட கொடுக்கவில்லை.

இப்படி புகைச்சல் அதிகரிக்கும் வேளையில்

மாஞ்சி என்ற கூட்டணிக்கட்சிக்காரர் (நிதிஷ்குமாரால் ஓபிஎஸ் போல பினாமி முதல்வராக்கப்பட்டவர், பின்பு பாஜக ஆதரவளித்ததால் முறுக்கிக் கொண்டு தனிக்கட்சி ஆரம்பித்தவர், இப்போது பாஜகவை விட நிதீஷோடு நெருக்கம் காட்டுபவர்)   இப்தார் விருந்தளிக்க 

அதிலே பாஜக ஆட்களைத் தவிர மற்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

"இவர்கள் எல்லாம் நவராத்திரிக்கு பழங்களை வைத்து (அதாவது அசைவம் இல்லாமல்) விரதமும் விருந்தும் கொடுக்க எப்போதுதான் கற்றுக் கொள்ளப் போகிறார்களோ "


என்று இப்போது பாஜகவின் எம்.பி கிரிராஜ்சிங் புலம்பியுள்ளார்.

ஆக கோட்டைக்குள் குத்து வெட்டு தொடங்கி விட்டது.

இனியெல்லாம் சுவாரஸ்யமே . . .


No comments:

Post a Comment