Saturday, June 10, 2017

மோடி – கோனார்க் – மினி ஸ்கர்ட்



அசிங்கப்படறதெல்லாம் மோடிக்கு புதுசா என்ன?


மோடி ஒரு மூடர் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்திய வரலாறு குறித்த எந்த அறிவும் இல்லாமல் மோடி அபத்தமாக உளறுவது நமக்கு ஒன்றும் புதிது அல்ல.

என்ன, இந்த முறை அவர் உளறியுள்ளது அயல் நாட்டில். அமெரிக்காவில்

கோனார்க் சூரியனார் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது என்றும் அங்கே உள்ள சிலைகளில் பெண்கள் மினி ஸ்கர்ட் அணிந்து கைப்பை வைத்துள்ளது போன்ற சிலைகள் அக்கோயிலில் உண்டு என்றும் பேசியுள்ளார். ஆகவே இந்தியப் பெண்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே மினி ஸ்கர்டையும் கைப்பையையும் பயன்படுத்தி உள்ளனர் என்று பெருமையாக பேசி உள்ளனர்.

இதிலென்ன தவறு என்று பரிவாரக்கும்பலைச் சேர்ந்தவர்கள் புறப்பட்டு வரலாம்.

கோனார்க்கில் உள்ள சூரியக் கோவில் கட்டப்பட்டது என்னமோ கி.பி 1300 ம் வருடத்தில்தான். அதாவது கிட்டத்தட்ட 700 வருடங்கள் முன்பாகத்தான். மோடி சொன்னதற்கும் கட்டப்பட்ட ஆண்டிற்கும் இடையிலான வருடங்கள் ரொம்ப குறைவுதான். வெறும் 1300 வருடங்கள் மட்டுமே.

கோனார்க்கில் ஏராளமான சிற்பங்கள் உண்டு என்பது வாஸ்தவம்தான். அவை எதற்கு பிரசித்தி பெற்றவை என்பது எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்கள் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

கோனார்க் சூரியனார் கோயில் உண்மையிலேயே ஒரு இந்தியாவின் கலைப் பொக்கிஷம். அற்புதமான வடிவமைப்பு கொண்ட, தற்போது வழிபாடு எதுவும் நடைபெறாத சுற்றுலாத் தளம். இரண்டு முறை நான் அங்கே சென்றுள்ளேன். குறைவான உடையோடு பெண்கள் இருப்பது போன்ற சிலைகள் அங்கே உண்டு. ஆனால் தற்போதைய நாகரீக மினி ஸ்கர்ட், கைப்பை எல்லாம் வைத்த பெண்களின் சிலைகள் எல்லாம் கிடையவே கிடையாது.
                                                     
அப்புறம் எப்படி மோடி இப்படி பேசினார்?

ஜெர்மனியில் அவரை சந்தித்த நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த உடை நினைவுக்கு வந்திருக்குமோ?

இவரை பிரதமராக வைத்துக் கொண்டு  இன்னும் இரண்டு வருடம் இந்தியா என்னவெல்லாம் அசிங்கப்படப் போகிறதோ?

5 comments:

  1. மோடியோட பிரியங்கா உட்கார்ந்த மாதிரி இருந்த போட்டோவை போட்டிருந்தா கிளுகிளுப்பா இருந்திருக்குமே

    ReplyDelete
    Replies
    1. இப்படி சில அல்பங்கள் அலையும் என்பதாலேயே அந்த படத்தை கவனமாக தவிர்த்தேன்

      Delete
  2. //இந்திய வரலாறு குறித்த எந்த அறிவும் இல்லாமல் அபத்தமாக உளறுவது நமக்கு ஒன்றும் புதிது அல்ல.//

    இந்த வரியில் பொருள் மயக்கமேற்படுவதை கவனித்தீர்களா? 'அவர்' என்று முன்போ இடையிலோ சேர்த்துவிட்டீரென்றால் சரியாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. திருத்தி விட்டேன்

      Delete
  3. கோனார்க் கோவில் சிற்பங்களை ஒன்று விடாமல் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள் வெளிநாட்டினர். அங்கே போய் மோடி உளறுவதை நிறுத்தினால் நல்லது

    ReplyDelete