ஒரு அவசர வேலையாக மனைவி வெளியே போக, ஒரு குருமா மட்டும் செய்து வையுங்கள்
என்று சொல்ல
“இதற்குத்தானே காத்திருந்தேன் இத்தனை நாளாய்”
என்று அவசரம் அவசரமாக களம் இறங்கினேன்.
ஸ்டெப் 1 : தக்காளியை மட்டும் தனியாக போட்டு சாறு எடுத்துக் கொண்டேன்.
ஸ்டெப்
2 : ஊற
வைத்த முந்திரி, தேங்காய் இவற்றோடு கசகசா, பட்டை, சோம்பு போட்டு அறைத்து வைத்துக்
கொண்டேன்.
ஸ்டெப் 3 : காலி ப்ளவர், காரெட், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை கொதிக்கும் தண்ணீரில்
கொஞ்ச நேரம் ஊற வைத்துக் கொண்டேன்.
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் வைத்து கடுகு தாளித்து, சீரகம்,
கடலைப் பருப்பெல்லாம் போட்டு வறுத்து, முதலில் வெங்காயம், குட மிளகாய், பிறகு, காளி ப்ளவர்,
காரெட், பச்சைப் பட்டாணி என்று வதக்கி, அதன் பின் நறுக்கி வைத்த தக்காளியையும்
போட்டு வதக்கிக் கொண்டேன். இந்த நேரத்தில் கொஞ்சம் மிளகாய் பொடியையும் உப்பும்
சேர்த்துக் கொண்டேன்.
எல்லாம் நன்றாக வதங்கிய நேரத்தில் தக்காளிச்சாற்றை சேர்த்து அது நன்றாக
கொதித்து வந்ததும் பிறகு அறைத்து வைத்த தேங்காய்ப் பால் கலவையையும் சேர்த்து
நன்றாக கொதித்து வந்ததும் இறக்கி வைத்து கொத்தமல்லி சேர்த்து பறிமாறவும்.
பின் குறிப்பு 1 : மாங்கு மாங்கு என்று குருமாவை தயாரித்தாலும் மனைவி வந்து
பத்து நிமிடத்தில் தயார் செய்த சப்பாத்தி
இல்லையென்றால் இந்த குருமாவுக்கு ஏது மதிப்பு ஏது?
அருகில் எந்த எண்ணும் இல்லாவிட்டால் பூஜ்ஜியத்திற்கு மதிப்பு கிடையாது
என்பது போல முக்கிய உணவு இல்லாமல் இணை உணவிற்கு ஏது பயன்?
அதனால் இதற்கு பூஜ்ஜிய குருமா என்று பெயர் சூட்டுவது பொருத்தம்தானே!
பின் குறிப்பு 2 : என்னிக்காவது ஒரு நாள் எதையாவது செஞ்சுட்டு அதை இப்படி ப்ளாக்கில் போட்டு பந்தா செய்யனுமா என்ற மனைவியின் கேள்வியைத் தவிர்க்க எப்படியெல்லாம் யோசித்து ஐஸ் வைக்க வேண்டியிருக்கு !!!!!!
தலைப்பைப் பார்த்து, ரஜினியை அரசியலுக்கு அழைத்த திருமாவைத் தாளித்திருப்பீர்கள் என்று பார்த்தால் நிஜமான குருமா. செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteஆகா
ReplyDeleteபெயர் அருமை
அட நல்ல ரெசிப்பி....ஈஸி...இந்த முறையிலும் செய்து பார்த்துட்டு வேண்டியதுதான்....
ReplyDeleteகீதா
அருமை.காய்கறிகளை நீங்க நறுக்கி வைத்திருகும் அழகே ஒரு தனியழகு.
ReplyDeleteநான் பிரெட்டுடனும் குருமா சாப்பிடுவேன்.
இதோடு மாட்டுக்கறியையும் சேர்த்தால் மாட்டுக்கறி குருமா. செய்துபார்த்துடலாம்.
ReplyDeleteரெசிபிக்கு நன்றி.
panrikariyilum kuruma siyalam.
ReplyDeleteதாராளமாக செய்யலாமே. செய்யும் போது அழைக்கிறேன். வந்து சாப்பிட்டு விட்டு செல்லவும்
Deleteசங்கிகள் முட்டாள்கள், முரடர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்
Delete