கடந்த வாரம் ஒரு பி.எஸ்.என்.எல் தோழரின் மகனின் திருமணத்தில் கலந்து
கொண்டேன். வித்தியாசமான அனுபவமாக இருந்ததால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சமஸ்கிருத மந்திரங்கள் முற்றிலும் விலக்கப்பட்டு முழுமையாக தமிழிலேயே
நடைபெற்ற திருமணம் அது. திருமணத்தை நடத்தி வைத்தவர் காவி வேட்டி கட்டி ருத்ராட்சர
மாலை எல்லாம் அணிந்திருந்தாலும்
அத்திருமணத்தில்
மூத்தோர் வழிபாடு,
பெற்றோர் வழிபாடு
ஆகிய இரண்டு அம்சங்களே பிரதானமாக இருந்தன.
அவைகளுக்குப் பின் மங்கல நாண் அணிவித்தல் என்பதோடு திருமண விழா
நிறைவுற்றது.
புரியாத மொழியில் யாரோ செல்வதை மணமக்கள் ஒன்றும் தெரியாமல் அப்படியே
கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் சடங்குகள் இல்லாதது மனதுக்கு நிறைவாக இருந்தது.
இத்திருமணத்தை முழுமையாக நல்ல தமிழில் நடத்தி வைத்தவர் பி.எஸ்.என்.எல்
நிறுவனத்தில் ஒரு மேலதிகாரி என்று அறிந்த போது கொஞ்சம் ஆச்சர்யமாகவே இருந்தது.
பின் குறிப்பு : சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் தெரிந்தால் அவற்றைச்
சொல்லி யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இது பற்றி நான் எழுதிய ஒரு
கட்டுரை “மகளிர் சிந்தனை” இதழில் பிரசுரமானது. அதை தேடிக் கண்டுபிடித்து விரைவில்
பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment