Friday, June 16, 2017

இன்று நித்தி சாமியார், நாளை . . . .

தமுஎகச வின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா வின் முகநூல் பதிவு கீழே உள்ளது.  போலிச்சாமியார் நித்தியானாந்தாவின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது இன்றைக்கு கிடைத்துள்ள வெற்றி. மற்ற போலிகளின் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கான போராட்டமும் எதிர்காலத்தில் வெற்றி பெறும்.
 
பவழக்குன்று மலையை மீட்டனர் மார்க்சிஸ்ட்டுகள்!






திருவண்ணாமலை மலையின் ஒரு பகுதியாக உள்ள பவழக்குன்று மலையை கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தனின் கும்பல் ஆக்ரமித்து அங்கு குடிசைகள் போட்டு தங்கியதுடன், ஆசிரமம் அமைக்க பூமி பூஜையும் நடத்தியது. அங்கு மூன்று வெண்கல சிலையும் ஸ்தாபித்து பூஜைகளும் நடத்தினர்.ராயர் கிருஷ்ணமூர்த்தி என்பவனின் குண்டர்படை அவர்களுக்கு இரவும்பகலும் காவல்காத்தது.

இதனையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் சிவக்குமார் கடந்த 5 ஆம் தேதியே கோட்டாச்சியரிடமும் தாசில்தாரிடமும் புகார் அளித்தனர்.அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன், நகரச்செயலாளர் தங்கமணி, வழக்கறிஞர் அபிராமன் உள்ளிட்ட தோழர்கள் நேற்று முன் தினம் இரவு மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் கொடுத்ததுடன், நித்தியானந்தா உள்ளிட்டோரை குண்டர்ச்சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கலெக்டர் உடனடியாக தலையிட்டு ஆக்ரமிப்பை அப்புறப்படுத்துமாறு தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.ஆனால் தாசில்தாருக்கு ரொம்ப ஜீவகாருண்ய மனசு போல...அவர்களுக்கும் வாய்ப்புக்கொடுக்கணும்ன்னு திரும்பிவந்துவிட்டார். இதனையறிந்து நேற்று கோட்டாச்சியரை சந்தித்த மாவட்டச்செயலாளர் சிவக்குமார், மீண்டும் முறையிட்டார். கோட்டாச்சியரோ இன்று மதியத்துக்குள் அகற்றிடுவோம் என சொன்னார். அவ்வாறு செய்யாவிட்டால் மலையில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர் தோழர்கள்.

இன்று காலை கோட்டாச்சியர் உமா மகேஸ்வரி நேரடியாக மலைக்கே வந்து பார்த்துவிட்டு அதிர்ந்து போனார்.சாமியாரினிகளும் சாமியார்களும் ஸ்டவ் வைத்து சமைத்து குடிசைகளில் குடும்பம் நடத்துவதை கண்ட அவர், உடனே குடிசைகளை அகற்றுமாறு சொன்னார். சாமியின் கும்பல் வழக்கம்போல் அவரைத்தெரியும் இவரைத்தெரியும்ன்னு பீலா உட்டிருக்கானுங்க.அதையெல்லாம் காதில் வாங்காத கோட்டாச்சியர் குடிசைகளையும் சிலைகளையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.அரசு சிப்பந்திகளும் அப்பகுதி மக்களும் வீரபத்திரன் தலைமையில் திரண்டிருந்த நம் தோழர்களும் குடிசைகளை பிரித்துப்போட்டு அந்த கும்பலை காலி செய்தனர்.

உறுதியான நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கும் கோட்டாச்சியருக்கும், விடாது போராடி மலையை மீட்ட தோழர்களுக்கும் அனைவரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

இப்படியாக இரண்டாவது முறையாகவும் மலையை ஆக்ரமிக்கும் நித்தியானந்தாவின் ஆனந்தத்திற்கு ஆப்பு வைத்துவிட்டோம்.

முக்கிய குறிப்பு : இப்போராட்ட களேபரங்கள் நடந்த திசையின் பக்கம்கூட உள்ளூரின் எந்த கட்சியுமே எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது மிகுந்த பாராட்டுக்குரியது. நல்லாருங்கப்பா.. நித்தியின் பூரண ஆசிர்வாதம் உமக்கு கிடைக்கட்டும்.

1 comment:

  1. //இப்போராட்ட களேபரங்கள் நடந்த திசையின் பக்கம்கூட உள்ளூரின் எந்த கட்சியுமே எட்டிக்கூட பார்க்கவில்லை//
    அவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும்?
    //மலையை ஆக்ரமிக்கும் நித்தியானந்தாவின் ஆனந்தத்திற்கு ஆப்பு வைத்துவிட்டோம்.//
    கடவுளின் துதுவர்களிடமே கை வைத்துவிட்டார்கள் இல்லையா! இனிதான் இருக்கிறது இவர்களுக்கு கடவுளின் ஆப்பு எல்லாம்.

    ReplyDelete