ஜாதிய ஆணவப் படுகொலைகளை நிறுத்த தனிச்சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் எங்கள் கோட்டத்தின் சார்பிலும் பங்கேற்கவுள்ளது குறித்து முன்னரே எழுதியிருந்தேன்.
அது தொடர்பாக எழுதிய சுற்றறிக்கையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
முக்கியமானதொரு இயக்கத்தில் எங்கள் தோழர்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டது குறித்து பெருமிதமாகவும் உள்ளது. அன்றைய இருபத்தி ஆறு கிலோ மீட்டர் நடைப்பயணத்தில் என்னால் அதிகபட்சம் சுமார் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் வரைக்குமே நடக்க முடிந்தது. மற்ற சமயங்களில் இரு சக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து கொண்டிருந்தேன். சமீப காலத்தில் நான் அதிகமாக நடந்தது இதுதான் என்றாலும் முழுமையாக நடக்க முடியாமல் போனது குற்ற உணர்வைத் தரத்தான் செய்கிறது.
அன்றைய நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே உள்ளது. மேலே உள்ள புகைப்படத்தில் எங்கள் கோட்டத் தோழர்களுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ், எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் ஆகியோர் உள்ளனர்.
நடைப்பயணம் 15,06.2017 அன்று விழுப்புரம் வந்த போது எங்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணக்குழுவிற்காக காத்திருந்த தோழர்கள் கீழே.
நடைப்பயணம் நேற்று திண்டிவனம் வந்த போது எங்கள் திண்டிவனம் கிளைச்சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்வின் புகைப்படங்கள் கீழே உள்ளது.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 25/17 15.06.2017
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழர்களே,
நீண்ட பயணத்தில் சிறிய பகுதியாய்,
கோட்டத்தின் பெருமிதமாய்
மனம் ஒப்பி திருமணம் செய்து கொள்ள விழைபவர்களை
ஜாதியின் பெயரால் ஆணவப் படுகொலை
செய்யும் அராஜகத்தைக் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 09.06.2017 அன்று ஒரு
மாபெரும் நடைப்பயணத்தை சேலம் நகரில் தொடங்கியது. வரும் 23.06.2017 அன்று
சென்னையில் நிறைவடையவுள்ள இந்த மகத்தான இயக்கத்தில் நமது கோட்டத்தின் சார்பிலும்
பங்கேற்றுக் கொண்டோம்.
13.06.2017 அன்று கள்ளக்குறிச்சி தொடங்கி மாடூர்,
தியாகதுர்கம் வழியாக செம்பியமாதேவி வரை நிகழ்ந்த 26 கிலோ மீட்டர் நடைப்பயணத்தில் நமது
வேலூர் கோட்டத்திலிருந்து
தோழர்கள் வி.சரவணன் (ஆரணி), டி.மணவாளன், வி.சுகுமாரன்,
கே.சரவணகுமார், பி.கணேஷ், ஆர்.வெற்றிவேல், கே.பி.சுகுமாரன், பி.ராஜூ, பி.குப்புசாமி
(கடலூர்) கே.வேலாயுதம், ஆர்.ராஜா, ஏ.அருண், எஸ்.பாலாஜி, எம்.அரசு, சரவணகுமார்,
எம்.ஜெயபாலன், பி.தெய்வீகன், டி.குருமூர்த்தி, ஆர்.பாலசுப்ரமணியன் (கள்ளக்குறிச்சி) கே.கவியரசு (காட்பாடி) டி.தேவராஜ், பி.சுரேஷ்குமார் (குடியாத்தம்) ஜி.வைத்தியலிங்கம்,
பி.ஜெயப்பிரகாஷ், (பண்ருட்டி) ஏ.கே.பரத்,
கே.வெங்கடேசன் (ராணிப்பேட்டை) என்.ஆரோக்கியராஜ்,
திருக்கோயிலூர், கே.சுந்தரமூர்த்தி, ஆர்.தங்கவேலு (விருத்தாச்சலம்) எஸ்.நடராஜன் (வேலூர்) .ஜெயகுமார் (பி&ஜி.எஸ்
கிளை) எஸ்.ராமன், உ.கங்காதரன், சி.கணேசன்,
உ.வஜ்ஜிரவேலு (கோட்ட அலுவலகம்) வி,குபேந்திரன், பி.தமிழ்மணி (பொது இன்சூரன்ஸ்)
என முப்பத்தி ஏழு தோழர்கள் பங்கேற்றனர். கடும்
வெயிலை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக
பங்கேற்று சமூக நீதியை நிலை நாட்டும் வர்க்க உணர்வோடு களத்தில்
செயல்பட்ட தோழர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.
சமூக நீதியை
நிலை நாட்டுவதற்கான நீண்ட நெடிய போராட்டத்தில் இந்த நடைப்பயணம் ஒரு சிறு
பகுதிதான். அதிலே நம்முடைய பங்களிப்பு இன்னும் சிறு பகுதிதான். சிறு ஓடைகள்
இணைந்துதான் பெரு நதி உருவாகிறது. நதிகளின் சங்கமமே கடலாகிறது. அந்த வகையில் நமது
பங்கேற்பும் முக்கியத்துவமானதுதான்.
நடைப்பயணத்தில்
தமிழக இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்கேற்பு மகத்தானது என்றும் வேலூர் கோட்டத்தின்
முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது என்றும் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர்
கே.சுவாமிநாதன், கள்ளக்குறிச்சியில் நமது தோழர்கள் மத்தியில் உரையாற்றுகையில்
கூறினார். கோட்டத்திற்கு பெருமை சேர்த்த தோழர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களை
உரித்தாக்குகிறோம்.
நம்
கோட்டத்தின் பணிகளை மேலும் மெருகேற்ற நடைப்பயண அனுபவம் உதவிகரமாக இருந்திடும்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் . .எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment