Thursday, June 15, 2017

வைரத்தை விழுங்கிய எலி



வாட்ஸப்பில் ஆங்கிலத்தில் வந்த கதையை தமிழில்   கொடுத்துள்ளேன்.



வைர வியாபாரியின் கடையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு எலி, ஒரு பெரிய வைரக்கல்லை விழுங்கி விட்டது. அந்த வியாபாரியால் எலியை பிடிக்க முடியாமல் எலி பிடிப்பவரை கூட்டி வந்தார். எலி பிடிப்பவரைப் பார்த்த உடன் எலி ஓடி விட்டது. துரத்திக் கொண்டே போனால் அங்கே ஒரு மறைவிடத்தில் நூற்றுக் கணக்கான எலிகள் இருந்திருக்கிறது.

அங்கே ஒரு எலி மட்டும் சற்று உயரத்தில் கால் மீது கால் போட்டுக் கொண்டு பந்தாவாக இருந்திருக்கிறது. எலி பிடிப்பவர், அதை குறி வைத்துத் தாக்கி பிடித்து கொன்று விட்டார். அதன் வயிற்றில்தான் வைரம் இருந்தது.

“எப்படி இந்த எலியை சரியாக கண்டுபிடித்தீர்கள்” என்று வைர வியாபாரி வியப்புடன் கேட்க

அந்த எலி பிடிப்பவர்

“அதொன்றுமில்லை. முட்டாள்களிடத்தில் திடீரென செல்வம் அதுவும் முறைகேடாக, சேரும் போது அவர்கள் செய்யும் வெட்டி பந்தா ஓவராகத்தான்  இருக்கும்”

இது சரிதான். எத்தனை பேரை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்!!!!!!!!

No comments:

Post a Comment