Monday, June 19, 2017

கறை மறைக்கவே . . . கலாம் போலவே . . .




குஜராத்தில் மோடி நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்தில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். வாஜ்பாயின் ஆட்சிக்கு உலகெங்கும் கெட்ட பெயர். இந்தியாவின் மானம் நிஜமாகவே கப்பலேறியது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வேன் என்று வாஜ்பாய் புலம்பும் அளவிற்கு மோடி ரத்த வேட்டை நடத்தியிருந்தார். 

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்ற களங்கத்தை மறைக்க அவர்களுக்கு ஒரு இஸ்லாமிய முகம் தேவைப்பட்டது. அதனால் குடியரசுத்தலைவரானார் திரு அப்துல் கலாம். 

தனிப்பட்ட முறையில் எளியவராக, நல்லவராக இருந்தாலும் குஜராத் கலவரங்கள் நிகழ்ந்திருக்காவிட்டால் திரு அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. 

வரலாறு மீண்டும் திரும்புகிறது.

பிரதமராக  மோடியின் ஆட்சிக்காலத்தில்  சிறுபான்மை மக்களோடு தலித் மக்களும் தாக்கப்படுகின்றனர். உனா தொடங்கி ரோஹித் வெமுலா வரை, மாட்டிறைச்சி தடை முதற்கொண்டு பல உதாரணங்கள் உண்டு.

தலித் மக்கள் மத்தியில் சரிந்து வரும் செல்வாக்கை தடுத்து நிறுத்த தலித் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தி அதிலே தனது கறையை மறைக்கப் பார்க்கிறது.

அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் வேறு வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது எதிர்க்கட்சிகளை தலித் விரோதிகள் என்று பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான தந்திரமும் இதில் உள்ளது.

குடியரசுத் தலைவர் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்பாகவே இருந்தாலும் கூட,   ஆர்.எஸ்.எஸ் பாசறையைச் சேர்ந்தவர், அவர்  யாராக இருந்தாலும்
தேர்ந்தெடுக்கப்படுவது இந்தியாவிற்கு நல்லதல்ல. 

 

4 comments:

  1. அப்துல் கலாம் ஐயா இந்தியாவின் பெருமை. அவரை சிறுமை செய்யாதீர்

    ReplyDelete
  2. அவர் நல்ல மனிதர். திறமையான விஞ்ஞானி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் கிடையாது. அவர் குடியரசுத்தலைவராக எதுவும் சாதிக்கவில்லை. குடியரசுத்தலைவர் செய்ய வேண்டிய பணிகளில் எதுவும் சாதிக்கவில்லை. மாணவர்களோடு பேசுவது என்பதை கணக்கில் கொள்ள முடியாது.

    ReplyDelete
    Replies
    1. சாதிக்கவில்லை என்பதைவிட சாதிக்க முடியாத பதவி அதுன்னு சொல்வதே சாலச்சிறந்ததுண்ணே. எப்பேர்ப்பட்ட உத்தமர், புனிதர் வந்து ஜனாதிபதி பதிவுல உக்காந்தாலும் ஒரு யூசும் இல்ல.

      Delete
    2. அப்படியெல்லாம் இல்லை.அரசியல் சாசன நெறிகளை அமலாக்குவது என்பதுதான் ஒரு குடியரசுத்தலைவரின் முக்கியப்பணி. சமீப காலத்தில் அதனை சரியாக செய்தவர் திரு கே.ஆர்.நாராயணன் மட்டுமே

      Delete