Tuesday, June 27, 2017

கண் சிமிட்ட . . .கண்ணீர் வந்தது




சில தினங்கள் முன்பாக சென்னை சென்றேன்.  வழியில் நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் காபி சாப்பிட சென்ற போது பார்த்த காட்சியை கொஞ்சம் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். 

நான் அமர்ந்திருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் இருந்த மேஜையை சுத்தம் செய்த சிறுவன், அந்த சோபாவில் ஒரு நொடி உட்கார்ந்து ஸ்டைலாக கால் மீது கால் போட்டுக் கொண்டான். அடுத்த நொடியே யாராவது அவனை பார்க்கிறார்களா என்று அச்சத்தோடு சுற்றும் முற்றும் நோக்கினான்.

நான் அவனைப் பார்த்து மெல்லியதாய் புன்னகைக்க, என்னைப் பார்த்து கண் சிமிட்டு விட்டு அடுத்த மேஜைக்கு போய் விட்டான்.

அந்த சிறுவனுக்கு அதிகபட்சம் பதினைந்து அல்லது பதினாறு வயது இருக்கும். நேபாளத்திலிருந்தோ அல்லது ஏதோ வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது இன்னும் பால் வடியும் அந்த முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

படிப்பை தொடர முடியாமல் சில ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு உழைக்க வருமளவிற்கு வறுமை ஆட்டிப் படைக்கிறது என்பதை நினைக்கையில் ஒரு நிமிடம் கண்ணில் நீர் துளித்தது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சி.ஐ.டி.யு அமைப்பின் செயல் திட்டத்திலும் அது உள்ளது. விரைவில் அப்பணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது முக்கியம். 

பின் குறிப்பு : மேலே உள்ள படம் கூகிளிலிருந்து எடுக்கப்பட்டது


 

1 comment:

  1. படிப்பை தொடர விரும்பினாலும் முடியாத நிலமை,போதாதிற்கு வறுமையினால் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று உழைக்க வேண்டிய நிலை. மிகவும் கவலையானது. கொடுமை.

    ReplyDelete