Saturday, June 3, 2017

சரக்கு பாட்டில் எனும் பொதுச்சொத்து





டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்களில் பெண்கள் ஈடுபடுகையில் அவர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துகின்றனர். ஆகவே அவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமென்று யாரோ ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.

அப்படி என்ன பொதுச்சொத்தை பெண்கள் சேதப்படுகிறார்களாம்?

வேறென்ன மது பாட்டில்களைத்தான்.

யப்பா, நல்ல பொதுச்சொத்து!!!

நல்ல பொது நலன்!!!!

அரசு எவ்வழியோ, மக்களும் அதே வழியில்தானே செல்வார்கள்!

டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது “அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாகச் சொல்லி” வழக்கு பதிந்த சமாதி அம்மையாரின் ஆன்மா படி ஆட்சி நடத்துவர்களின் ராஜ்ஜியத்தில் மக்களும் ஆட்சியாளர்களைப் போலத்தானே இருப்பார்கள், கேவலமாக.

2 comments:

  1. பெண்கள் முன் வந்து இப்படிப் போராட்டம் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அதற்கு எதிராக வழக்கா..? ஏன் இப்படி?

    ReplyDelete
  2. நல்ல வேலை ஜெ இல்லை. இருந்திருந்தால் இந்த பெண்களுக்கு கிடைத்திருக்கும் சரியான வெகுமதி.

    ReplyDelete