மேலே உள்ள தகவல்கள் வாட்ஸப்பில் உலா வந்து
கொண்டிருக்கிறது. மேலோட்டமாக பார்க்கிறபோதே இது ஏதோ வில்லங்கம் என்று தெரிந்தது.
2017 ம் ஆண்டின் ஊழல் கட்சிகள் என்று சொல்லப்படுகிற இந்த பட்டியலில் உள்ள சில
கட்சிகள் காணாமல் போய் எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டது.
சோவியத் யூனியனே இல்லை. ஆனால் பட்டியலில்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
ஜெர்மனியின் ஹிட்லர் கட்சியும்
இத்தாலியின் முசோலினி கட்சியும்
இன்னும் அந்த பட்டியலில் இருக்கிறது.
பிடல் கேஸ்ட்ரோ, புரட்சி மூலம் தூக்கியெறிந்த
பாடிஸ்டா கட்சிக்குக் கூட 2017 பட்டியலில் இடம் தருகிறார்கள்.
சியாங்கே ஷேக் கட்சியும் கூட இங்கே உள்ளது.
இப்படி ஒரு அபத்தமான சர்வேயை பி.பி.சி செய்திருக்குமா என்று
தேடிப்பார்த்தால் உண்மை தெரிந்தது.
பி.பி.சி பாய்ண்ட் என்று ஒரு இணையதளம் இதைப் பிரசுரித்ததாம். அது
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை போட்டுத் தள்ள உருவாக்கியதாம். இப்படி ஒரு சர்வே எதுவும் தங்களால் நடத்தப்படவில்லை என்று பி.பி.சி யும் தெளிவுபடுத்தி விட்டது.
காங்கிரஸ் கட்சியின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளதால் பாவம் பலர் இதனை
உற்சாகமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்படி
ஒரு மோசடி வேலையை பலர் நம்பியதுதான் பரிதாபகரமானது.
ஊழல் கட்சிகள் என்று பட்டியல் தயாரித்ததிலேயே ஊழல். ஆமாம், இந்த சவப்பெட்டி ஊழல், வியாபம் ஊழல், கடலை மிட்டாய் ஊழல் செஞ்ச்
கட்சியெல்லாம் ஏம்பா பட்டியலில் வரவில்லை? லஞ்சம் கொடுத்தாங்களா?
நீங்க எல்லாம் நல்லா வருவீங்க. அடுத்து என்ன மோசடி செய்யப் போறீங்க?
ஊழல் கட்சிகள் என்று பட்டியல் தயாரித்ததிலேயே ஊழல். ஆமாம், இந்த சவப்பெட்டி ஊழல், வியாபம் ஊழல், கடலை மிட்டாய் ஊழல் செஞ்ச் கட்சியெல்லாம் ஏம்பா பட்டியலில் வரவில்லை? லஞ்சம் கொடுத்தாங்களா?
ReplyDeletevidunga boss
indha
undi-kulikkina
oola-ley
varala!!
ஏண்டா கூமுட்டை, கம்யூனிஸ்ட் ஆட்சி மீது என்னடா ஊழல் புகார் இருக்கு?
ReplyDeleteஅதானி கிட்ட எலும்புத்துண்டு வாங்கி பொறுக்கித் தின்னும் நாய்கள் எல்லாம்
சிவப்புச்சூரியனைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது.